ஜெயிலர் பட வில்லன் விநாயகன் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.
மலையாள சினிமாவில் பல படங்களில் பிஸியாக நடித்து வருபவர் நடிகர் விநாயகன். இவர் தமிழில் கடந்த 2023 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் வில்லனாக நடித்து மிரட்டி இருந்தார். அதிலும் மலையாளம் கலந்த தமிழில் பேசி அசத்திருப்பார். அந்த வகையில் ஜெயிலர் படத்தில் இவர் கூறும் மனசிலாயோ எனும் வசனம் கூட மிகப்பெரிய அளவில் ட்ரெண்டானது. ரஜினியின் வேட்டையன் படத்திலும் இந்த வார்த்தையில் பாடல் ஒன்றும் இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான விநாயகன் சமீப காலமாக பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அந்த வகையில் இவர் ஏற்கனவே ஐதராபாத் விமான நிலையத்தில் பாதுகாவலர்களுடன் ஏற்பட்ட சர்ச்சையினால் இவர் கைது செய்யப்பட்ட பின் விடுவிக்கப்பட்டார். அடுத்தது இவர் டீக்கடையின் முன்பாக ரகளை செய்யும் வீடியோவும் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் தான் சமீபத்தில் தனது வீட்டின் பால்கனியில் இருந்து குடிபோதையில் அருகில் இருப்பவர்களை ஆபாசமாக பேசி இருக்கிறார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ரசிகர்களும் விநாயகனுக்கு எதிராக பல விமர்சனங்களை அடுக்கி வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து நடிகர் விநாயகன், போதையில் பேசிவிட்டேன் என தனது சமூக வலைதள பக்கத்தில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.