சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு மன்மதன் திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் சிம்பு தற்போது கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள தக் லைஃப் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அதே சமயம் இவர் அஸ்வத் மாரிமுத்து, தேசிங்கு பெரியசாமி ஆகியோரின் இயக்கத்தில் தனது அடுத்தடுத்த படங்களில் நடிக்க உள்ளார். இந்நிலையில் வருகின்ற பிப்ரவரி 3ஆம் தேதி சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு மன்மதன் திரைப்படம் ரீ – ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது என தகவல் கசிந்துள்ளது.
கடந்த 2001 ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் மன்மதன் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் சிம்புவுடன் இணைந்து ஜோதிகா, கவுண்டமணி, சந்தானம் மற்றும் பலர் நடித்திருந்தனர். ஏ.ஜே. முருகன் இந்த படத்தை இயக்கியிருந்தார். நடிகர் சிம்பு இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதேசமயம் யுவன் சங்கர் ராஜாவின் இசையில் வெளியான பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்நிலையில் இந்த படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதே சமயம் வருகின்ற பிப்ரவரி 1ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை கமலா திரையரங்கில் தினமும் இரண்டு காட்சிகள் ஒளிப்பரப்பப்பட இருப்பதாகவும் அதற்கான் டிக்கெட் முன் பதிவுகள் நடைபெற்று வருவதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.