இயக்குனர் மகிழ் திருமேனி, அஜித் குறித்து பேசி உள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வரும் மகிழ் திருமேனி தற்போது அஜித் நடிப்பில் விடாமுயற்சி எனும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படமானது பிரேக் டவுன் என்ற ஹாலிவுட் படத்தின் ரீமேக் என்று சொல்லப்படுகிறது. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க ஓம் பிரகாஷ் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். அனிருத் இதற்கு இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து படத்திலிருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள், பாடல்கள், டீசர், ட்ரெய்லர் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. மேலும் இந்த படமானது வருகின்ற பிப்ரவரி 6ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்நிலையில் இயக்குனர் மகிழ் திருமேனி சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் அஜித் குறித்து பேசி உள்ளார். அதில் அவர் பேசியதாவது, “அஜித் சாருடன் பணியாற்ற வேண்டும் என்பது என்னுடைய 15 வருட கனவு ஆகும். திடீரென ஒரு நாள் அஜித்தின் 62 ஆவது படத்தை இயக்க வேண்டும் என அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர்கள் உடனே படத்தை தொடங்க வேண்டும் என்று சொன்னார்கள். விடாமுயற்சி படத்தின் கதை என்னுடையது இல்லை. ஆனால் திரைக்கதையில் நான் பணியாற்றியுள்ளேன். ஈர்க்கப்பட்ட கதையில் பணியாற்றுவதில் இதுவே முதல் முறை” என்று தெரிவித்துள்ளார்.