ஐந்து போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் இந்திய அணி தொடக்க ஆட்டங்களில் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.இந்திய அணி இதுவரை இரண்டு போட்டிகளிலும் வெவ்வேறு 11 வீரர்களுடன் விளையாடி உள்ளது. அதே முடிவை மூன்றாவது டி20 போட்டியிம் எடுக்கலாம்.ராஜ்கோட்டில் நடைபெறவுள்ள போட்டியில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் யாரை அணியில் இருந்து வெளியேற்றுவார், யாருக்கு வாய்ப்புொடுப்பாரெ ன்கிற எடர்பார்ப்ப் எழுந்துள்ளது.ராஜ்கோட் டி20 போட்டியில் துருவால் ஜூரல் விளையாடுவது கடினம் என்று நம்பப்படுகிறது. அவரது இடத்தை சிவம் துபே அல்லது ராமன்தீப் சிங் நிரப்பலாம்.
சென்னை டி20 போட்டியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் துருவ் ஜூரலுக்கு சூர்ய குமார் யாதவ் வாய்ப்பு அளித்தார். எனினும் இலக்கை துரத்திய இந்திய அணி இக்கட்டான சூழ்நிலையில் இருந்தபோது துருல் தனது விக்கெட்டை இழந்தார். இந்திய அணியின் மூன்று பேட்ஸ்மேன்களும் 60 ரன்களுக்குள் பெவிலியன் திரும்பினர். பின்னர் பொறுமையாக விளையாடும் பொறுப்பு துருவின் தோள்களில் இருந்தது. ஆனால் அவர் 5 பந்துகளில் 4 ரன்கள் எடுத்து வெளியேறினார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ராஜ்கோட் டி-20 போட்டியில் துருவ் விளாடுவது சந்தேகமே.
கொல்கத்தாவில் நடந்த முதல் டி20 போட்டியில் ரிங்கு சிங், நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் காயமடைந்தனர். தசைப்பிடிப்பு காரணமாக நிதீஷ் தொடரில் இருந்து விலகினார். அதேசமயம் முதுகுவலி பிரச்சனையால் ரிங்கு இரண்டு போட்டிகளில் இருந்து வெளியேறினார். இந்த இரு வீரர்களுக்குப் பதிலாக சிவம் துபே, ரமன்தீப் சிங் ஆகியோர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டனர். ஆனால் இருவருக்கும் சென்னையில் வாய்ப்பு கிடைக்கவில்லை. ரிங்கு, நித்திஷுக்குப் பதிலாக,பதினோறு பேரில் துருவ் சேர்க்கப்பட்டார்.
சென்னை டி20யில் வாஷிங்டன் 26 ரன்கள் எடுத்ததோடு ஒரு விக்கெட்டையும் எடுத்தார்.அப்படிப்பட்ட சூழ்நிலையில், ராஜ்கோட்டில் அவருக்குப் பதிலாக சிவம் துபே அல்லது ராமன்தீப் சிங்குக்கு சூர்யகுமார் யாதவ் வாய்ப்பு அளிக்கலாம்.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் மூன்றாவது போட்டி ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா மைதானத்தில் இன்று நடக்கிறது. இந்த மைதானத்தில் இந்திய அணியின் சாதனை மிகவும் சிறப்பாக உள்ளது. இங்கு நடந்த 5 டி-20 போட்டிகளில் இந்திய அணி 4ல் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் அடைந்துள்ளது. இந்த மைதானத்தில் இங்கிலாந்து முதல் முறையாக டி-20 போட்டியில் விளையாடவுள்ளது. இந்த போட்டி இன்று இரவு 7 மணி முதல் நடைபெறும்.