அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டையில் மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடத்த அனுமதி வழங்க கோரி மனு தாக்கல்.
மனுதாரர்கள் குதிரை வண்டி பந்தயம் நடத்த அனுமதி கேட்டுள்ள இடத்தில் ஏற்கனவே வேறு கட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா? நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. புதுக்கோட்டை சேர்ந்த ராஜ்குமார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு.
அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பிப்ரவரி 9ஆம் தேதி புதுக்கோட்டை மச்சுவாடியில் இருந்து இச்சாடி வரை குதிரை வண்டி பந்தயம் மற்றும் மாட்டு வண்டி பந்தயம் நடத்துவதென முடிவு செய்து இதற்கான அனுமதி மற்றும் போலிஸ் பாதுகாப்பு வழங்க கோரி புதுக்கோட்டை கணேஷ் நகர் காவல் நிலையத்தில் மனு அளித்திருந்தோம் ஆனால் எங்களது மனுவை பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி காவல் ஆய்வாளர் அனுமதி வழங்க மறுத்துவிட்டார்.
குறிப்பாக மாட்டுவண்டி பந்தயங்கள் நடத்தக்கூடிய இடம் மிகுந்த போக்குவரத்து நெரிசல் உள்ள இடம் என்றும் அரசு மருத்துவமனை மற்றும் தேசிய நெடுஞ்சாலை பகுதி என்பதால் அனுமதி வழங்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் நாங்கள் அனுமதி வேண்டி கொடுத்துள்ள இடத்தில் மற்ற கட்சியினர் குதிரை வண்டி மாட்டு வண்டி பந்தயம் நடத்தியுள்ளனர் ஆனால் எங்களுக்கு மட்டும் அனுமதி வழங்க மறுத்துள்ளனர் இது ஏற்கத்தக்கது அல்ல எனவே பிப்ரவரி 9ஆம் தேதி மாட்டுவண்டி குதிரை வண்டி பந்தயம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரிய கிளாட் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் காவல் துறையினர் ஒருதலைபட்சமாக செயல்படுகின்றனர் பல்வேறு கட்சியினர் அதே இடத்தில் போட்டிகள் நடத்தியுள்ளனர். ஆனால் எங்கள் தரப்பிற்கு மட்டும் அனுமதி வழங்க மறுத்துள்ளனர் எனவே நீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும் என வாதிட்டார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் சம்பந்தப்பட்ட இடத்தில் ஏற்கனவே போட்டிகள் நடத்தப்பட்டுள்ளதா அதற்கு காவல்துறை அனுமதி வழங்கியதா என்பது குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைத்தனர்.