மூடுபனி படத்தின் பாடலான என் இனிய பொன் நிலாவே பாடலின் பதிப்புரைமையை சரேகமா இந்தியா லிமிடெட் நிறுவனம் சொந்தமானது என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.
பிரபல தமிழ் பாடலான ‘என் இனிய பொன் நிலவே’வின் பதிப்புரிமையை சரேகமா இந்தியா லிமிடெட் நிறுவனம் கொண்டுள்ளது என்றும், அப்பாடலின் இசையமைப்பாளர் இளையராஜா அதை மூன்றாம் தரப்பினருக்கு ஒதுக்க முடியாது என்றும் டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜாவின் மறுஉருவாக்கம் செய்யப்பட்ட பாடலை வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் வெளியிடுவதையும் நீதிமன்றம் தடை செய்தது.
என் இனிய பொன் நிலாவே உட்பட, மூடு பனியின் ஒலிப்பதிவுகள் மற்றும் இசைப் படைப்புகளின் பதிப்புரிமையை வைத்திருக்கும் சரேகமா இந்தியா லிமிடெட் (SIL), பிரதிவாதிகள் முறையான அங்கீகாரம் இல்லாமல் வரவிருக்கும் தமிழ் படத்திற்காக பாடலை மீண்டும் உருவாக்கியதாகக் கூறி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.