தமிழ் தேசிய கூட்டணி சுயேட்சை வேட்பாளர் தந்தை பெரியார், அம்பேத்கர் புகைப்படத்துடனும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மைக் சின்னத்துடனும் பள்ளிவாசல் முன்பாக ஒரே இடத்தில் எதிர் எதிரே நின்று வாக்கு சேகரிப்பு.
ஈரோடு புது மஜித் வீதியில் உள்ள பள்ளிவாசலில் தொழுகை முடித்து வந்த இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரிக்க திமுக, நாதக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வந்திருந்தனர். வழிபாடு தளங்களில் இருந்து 50.மீ தொலைவில் இருந்து பிரசாரம் செய்ய போலீசார் அறிவுறுத்தினர்.
இதனை ஏற்று திமுக.வினர், வாக்கு சேகரிக்க அங்கிருந்து 50.மீ தொலைவிற்கு அப்பால் சென்றனர். ஆனால் நாதக.வினர் பள்ளி வாசலில் நின்றனர். தொழுகை முடிந்து வந்தவர்களிடம் நாதக வேட்பாளர் சீதாலட்சுமி துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார்.
வி.சி.க விலிருந்து விலகிய ஆதவ் அர்ஜுன் தமிழக வெற்றிக் கழத்தில் ஐக்கியம்!
அதே நேரத்தில் அவர்களுக்கு எதிர்புறம் நின்றிருந்த, தமிழ் தேசிய கூட்டணி சார்பில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர் வெண்ணிலாவின் ஆதரவாளர்கள், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்கள் அடங்கிய பதாகைகளுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
பெரியாரிய உணர்வாளர்களும், பெரியாருக்கு எதிராக பேசி வரும் நாதகாவினரும் ஒரே இடத்தில் எதிரெதிரே நின்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.