Homeசெய்திகள்சென்னைஉதயம் திரையரங்கம் இடிக்கும் பணி திங்கள்கிழமை ஆரம்பம்!

உதயம் திரையரங்கம் இடிக்கும் பணி திங்கள்கிழமை ஆரம்பம்!

-

- Advertisement -

சென்னையின் அடையாளங்களில் ஒன்றான உதயம் திரையரங்கத்தின் இடிக்கும் பணிகள் திங்கள் கிழமை தொடங்குகிறது!

உதயம் திரையரங்கம் இடிக்கும் பணி திங்கள்கிழமை ஆரம்பம்!சென்னை அசோக் நகரில் 1983ம் ஆண்டு உதயமானது உதயம் திரையரங்கம். எஸ். நாராயண பிள்ளை எஸ்.சுப்பிரமணிய பிள்ளை,எஸ்.  கருப்பசாமி பிள்ளை, எஸ். பரமசிவம் பிள்ளை, எஸ். சுந்தரம் பிள்ளை, எஸ். கல்யாணசுந்தரப்பிள்ளை ஆகியோர்களால் உதயம் தியேட்டர் தொடங்கப்பட்டது.  முதலில் உதயம் திரையரங்கம் மட்டும் திறக்கப்பட்ட நிலையில், அடுத்து இரண்டு ஆண்டுகளுக்குள்ளாக சூரியன், சந்திரன் என மேலும் இரண்டு திரையரங்குகளும் 2000 ஆவது ஆண்டில் மினி உதயமும் உருவானது.

26 கிரவுண்ட் பரப்பளவைக் கொண்ட உதயம் திரையரங்க வளாகம் சென்னை மட்டுமல்லாது சென்னை நோக்கி வரும் வெளியூர் வாசிகளுக்கும் பிரியமான திரையரங்காகவே காணப்பட்டது. ரஜினி,கமல், விஜயகாந்த், விஜய், அஜித் என பலரது முதல் நாள் காட்சிகளுக்கும் திருவிழாவை போல களைகட்டும் இந்த இடம் தற்போது மௌன கூச்சலாக காணப்படுகிறது.

கடந்த 40 ஆண்டுகளாக பல வெற்றி படங்களை திரையிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்த உதயம் திரையரங்கம் தனது பொழுதுபோக்கு சேவையை நிறுத்தப் போவதாகவும் இதே இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு வரப்போவதாகவும் சில மாதங்களுக்கு முன்பே தகவல் வெளியான நிலையில், தற்போது அது தன்னுடைய பொழுதுபோக்கு சேவையை முற்றிலுமாக நிறுத்தியது. 1983 வது ஆண்டில் ஒரு டிக்கெட்டின் விலை 2.90 காசுகளாக விற்கப்பட்ட நிலையில் இறுதியாக திரையரங்கம் மூடும்  வரை 102 என்ற சாமணியர்களுக்கான  விலையிலேயே டிக்கெட்டுகள் விற்கப்பட்டது.

1983ம் ஆண்டு ரஜியின் சிவப்பு சூரியன் படமும், கமல்ஹாசனின் சட்டம் திரைப்படமும் இதில் முதன்முறையாக திரையிடப்பட்டது. பல ஆயிரம் திரைப்படங்கள் இதில் வெளியாகி உள்ள நிலையில்  ஒவ்வொரு புது படங்களின் வெளியீட்டின் போதும்  களைகட்டிய உதயம் கடந்த சில ஆண்டுகளாக கலை இழந்தும் தற்பொழுது நிரந்தரமாக மூடப்பட்டுள்ளதும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

6 நபர்களால் உருவான உதயம் திரையரங்கம் தற்போது அவர்களது வம்சாவழியான 42 பேர் இதன் பங்குதாரர்களாக உள்ளனர். ஓ.டி.டி வருகையும், ரசிகர்கள் வரத்து குறைவுமே தியேட்டரை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்ல முடியாததற்கான காரணம் என தகவல் தெரிவிக்கின்றனர் உதயம் திரையரங்கின் உரிமையாளர்கள். ஏற்கனவே சென்னையில் இயங்கி வந்த சாந்தி, கிருஷ்ணவேணி, ஏ.வி.எம் ராஜேஸ்வரி, பிரார்த்தனா, எஸ்.எஸ்.ஆர் பங்கஜம், அகஸ்தியா உள்ளிட்ட பல தியேட்டர்கள் மூடப்பட்டன அந்த வகையில் உதயம் தியேட்டர் தற்போது மூடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் பழமையான பல திரையரங்குகள் ரசிகர்களின் வரத்து குறைந்து பொருளாதார ரீதியிலான சிக்கலில் தவித்து மூடப்பட்டு வருகிறது. அந்த வகையில் உதயம் திரையரங்கும் அந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் திங்கட்கிழமை உதயம் திரையரங்கம் இடிக்கும்  பணிகள் தொடங்கும் எனவும் அதற்கான முதற்கட்ட பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

MUST READ