Homeசெய்திகள்கட்டுரைஓட்டுக்காக பெரியாரை முஸ்லீம்களின் எதிரியாக கட்டமைக்கும் சீமான்... பி.ஜெயினுலாபிதீன் பகீர் குற்றச்சாட்டு! 

ஓட்டுக்காக பெரியாரை முஸ்லீம்களின் எதிரியாக கட்டமைக்கும் சீமான்… பி.ஜெயினுலாபிதீன் பகீர் குற்றச்சாட்டு! 

-

- Advertisement -

ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பெரியாரை இஸ்லாமியர்களுக்கு எதிரி போல சீமான் கட்டமைக்க முயன்றதால் அவர் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்ததாக, தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் தலைவர் பி.ஜெயினுலாபிதீன் விளக்கம் அளித்துள்ளார்.

ஈரோடு இடைத்தேர்தலில் இஸ்லாமியர்களின் வாக்குகளை பெற சீமான் பெரியார் குறித்த அவதூறுகளை பரப்புவது குறித்து பி.ஜெயினுலாபிதீன் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- நாம் தமிழர் கட்சிக்கு உண்மையான தமிழ் உணர்வு, தமிழ் தேசியம் என்று எல்லாம் கிடையாது. முஸ்லீம், கிறிஸ்துவர்களை இந்துக்களாக மாற்றுவதுதான் அவர்களது நோக்கம். ஆர்.எஸ்.எஸ் அஜெண்டா தான் இவர்களது அஜெண்டா. ஆனால் தமிழர், இந்துத்துவாவை எதிர்க்கும் போர்வையில் அந்த கருத்தை சொல்கிறார்கள். அப்படி எண்ணும்போது இவர்களை எப்படி மற்ற கட்சிகளை போன்று பார்ப்பது. ஈரோட்டில் இதனை இஸ்லாமியர்கள் உணர்ந்து கொண்டார்கள் என்பது தெரிந்த உடன், நேற்றைய தேர்தல் பிரச்சாரத்தில் தலைப்பே பழனி பாபாதான். பழனி பாபா, மதத்தை சாதியை தூக்கி வீசு என்று சொன்னார் என சீமான் சொல்கிறார். ஆனால் பழனி பாபா சீமான் சொன்னதற்கு நேர்மாறாக பேசியவர். பழனி பாபா, தனக்கு மார்க்கம்தான் முக்கியம் மற்றது எல்லாம் இரண்டாம்பட்சம் என்று சொன்னவர். ஈரோட்டில் இஸ்லாமியர்கள் கணிசமாக உள்ளனர். அவர்களை வாக்குகளை பெற வேண்டும் என்றால் பழனி பாபா வேண்டும். முஸ்லீம்களை ஏமாற்றுவதற்காக தான் இந்த வேலையை செய்கிறார். இன்று பெரியாரை கேட்பது போல, நாளை பழனி பாபாவை யார் என்று கேட்பார்? இவர் ஒரு ஆபத்தான நபராக இருக்கிறார் என்பதால் எதிர்க்கிறோம்.

palani baba
palani baba

நாம் தமிழர் ஆவணத்தில் எழுதி வைத்திருப்பது மட்டும் அல்லாமல். அவரது வாயிலும் அவ்வப்போது உண்மைகள் வெளிவந்து விடுகிறது. இந்துக்களை தனது தமிழம் மதத்திற்கு வர வேண்டும் என அழைக்கிறார். அதேபோல் இஸ்லாமியர்களும், கிறிஸ்துவர்களும் தாய் மதத்திற்கு திரும்ப வேண்டும் என்றார். அப்போதுதான், சீமானுக்கு ஆதரவாக இருந்த இஸ்லாமியர்களுக்கு புரிய தொடங்கியது. நிறைய பேர் கண்டித்த உடன் நான் அப்படி சொல்லவில்லை என்று மறுத்தார். சைவ மதத்திற்கு அழைப்பதாக இருந்தாலும் நாங்கள் எப்படி அங்கே வருவோம். முஸ்லிம்களை தாய் மதத்திற்கு திரும்ப வலியுறுத்தி பல்வேறு இடங்களில் அவர் பேசியுள்ளார். 2014ஆம் ஆண்டிலேயே இதுதொடர்பாக சீமான் பேசியுள்ளார். அதில் இஸ்லாமியர்களுக்கு குரான், கிறிஸ்தவர்களுக்கு பைபிள் இருப்பது போல நான் ஒரு மதத்தை உருவாக்குகிறேன். அதன் பெயர் தமிழம். இந்த மதத்தில் திருக்குறள்தான் வேதம். எங்களுடைய முப்பாட்டன்தான் கடவுள் என்று சீமான் சொல்கிறார். குரான், பைபிள் போன்றவை வெளிநாட்டு வேதங்கள் என்கிறார். இதனை தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் சொல்கிறது. அந்த கூட்டத்தில் ஏசு கிறிஸ்துவத்தை உருவாக்கியது போல, முகமது நபி இஸ்லாத்தை உருவாக்கியது போல நான் மதத்தை உருவாக்க போகிறேன் என்றார்.  பெரியார் சமத்துவம் இஸ்லாத்தில் உள்ளது என்கிறார். ஆனால் சீமான் சமத்துவம் வேண்டும் என்றால் இஸ்லாத்தை விட்டு வாருங்கள் என்கிறார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியப்படாது – இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் – எதிர் கட்சிகள் கடும் எதிர்ப்பு

ஈரோடு தேர்தல் பிரச்சாரத்தின்போது பெரியார், முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கு போக சொன்னார் என்றும், ஆர்எஸ்எஸ் – இந்து முன்னணி கூட அப்படி சொன்னதில்லை என்றும் சீமான் சொல்கிறார். பெரியார் அப்படி சொன்னது மட்டும் அல்ல. எழுதியும் இருக்கிறார். அவரது குடியரசு இதழ்கள் எல்லாம் என்னிடம் உள்ளது. அவர் எப்போது பேசினார் என்றால் காங்கிரசில் இருந்த காலத்தில் அப்படி பேசினார். இப்போது சீமான் இதனை சொல்லி முஸ்லீம்களை பெரியாரை வெறுக்க வைத்து, அதன் வாயிலாக தமிழர்களிடையே உள்ள நல்லிணக்கத்தை கெடுக்கப் பார்க்கிறார். அதனாலதான் சீமானை விமர்சித்து பதிவைவ போட்டேன். பெரியார் சொன்னது உண்மைதான். அவர் பல விஷயங்களை சொல்லி இருக்கிறார். பெரியாரின் பிற்காலத்தை கருத்துக்களை நாங்கள் விமர்சித்துள்ளோம். அவர் நாத்திகராக இருந்தபோதும் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என போராடினார். அதனால்தான் இந்துக்கள் அவரை ஏற்றுக் கொண்டனர்.

தந்தை பெரியார்

பெரியாரின் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை என்றால், அந்த கருத்தை நான் விமர்சிக்கலாம். ஆனால் முஸ்லீம்களை விரட்ட வேண்டும் என்ற நிலைப்பாடு அவரிடம் கடைசி வரை இல்லை. முஸ்லீம்களுக்கு வகுப்புவாரி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பெரியார் போராடினார். அப்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்ட பெரியாரை, வேண்டும் என்று அவர் மீது வெறுப்பை விதைக்கிறார்கள். இஸ்லாமியர்களின் எதிரிகளாக கட்டமைக்கிறார்கள். முஸ்லிம்கள் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள். பெரியாரை எதிரியாக கட்டமைப்பதன் வாயிலாக திமுக, அதிமுக, திராவிடர் கழகம் என அனைத்துக் கட்சிகளும் முஸ்லீம்களுக்கு எதிரியாகி விடுவார்கள். அப்போது முஸ்லிம்களுக்கு சீமான் மட்டும்தான் நிற்கிறார் என்று காட்ட விரும்புகிறார். இப்படி ஒரு அயோக்கியத்தனமான வாதம் வைக்கக்கூடாது என்பதால் தான் தலையிட்டேன். இடைத்தேர்தல் நேரத்தில் இதை சொல்வதன் வாயிலாக முஸ்லீம்களின் வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு அவர் பேசியுள்ளார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ