Homeசெய்திகள்சினிமாசினிமாவில் வெற்றி பெறாவிட்டால் அதை பண்ண வேண்டும்..... அதிதிக்கு சங்கர் போட்ட கண்டிஷன்!

சினிமாவில் வெற்றி பெறாவிட்டால் அதை பண்ண வேண்டும்….. அதிதிக்கு சங்கர் போட்ட கண்டிஷன்!

-

- Advertisement -

அதிதி சங்கர், சினிமாவில் நடிப்பதற்காக தனது தந்தை தனக்கு போட்ட கண்டிஷன் குறித்து பேசியுள்ளார்.சினிமாவில் வெற்றி பெறாவிட்டால் அதை பண்ண வேண்டும்..... அதிதிக்கு சங்கர் போட்ட கண்டிஷன்!பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படுபவம் சங்கரின் இளைய மகள் தான் அதிதி. இவர் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாகவும் நடிகையாகவும் வலம் வருகிறார். தற்போது தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வரும் அதிதி சங்கர், கடந்த 2022 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து இவர் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் நடித்து பெயரையும் புகழையும் பெற்றார். சமீபத்தில் இவரது நடிப்பில் ‘நேசிப்பாயா’ எனும் திரைப்படம் வெளியானது. அடுத்தது இவர், ஒன்ஸ் மோர் ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இந்நிலையில் அதிதி சங்கர் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் தன்னுடைய அப்பா தனக்கு விதித்த நிபந்தனைகள் குறித்து பேசி உள்ளார். சினிமாவில் வெற்றி பெறாவிட்டால் அதை பண்ண வேண்டும்..... அதிதிக்கு சங்கர் போட்ட கண்டிஷன்!அதாவது நடிகை அதிதி டாக்டர் படிப்பை முடித்துவிட்டு சினிமாவில் நடிக்கப் போவதாக தன்னுடைய அப்பா சங்கரிடம் சொன்னாராம். அதற்கு சங்கர் நீண்ட நேரம் யோசித்த பின்னர், நடிப்பதற்கு சரி என்று சொல்லிவிட்டு சினிமாவில் வெற்றி பெறாவிட்டால் மீண்டும் மருத்துவ துறைக்கு திரும்பி விட வேண்டும் என சங்கர் தனக்கு கண்டிஷன் போட்டதாக அதிதி கூறியுள்ளார்.

MUST READ