Homeசெய்திகள்சினிமா'சவதீகா ரீலோடட்' வெர்ஷன் வெளியீடு!

‘சவதீகா ரீலோடட்’ வெர்ஷன் வெளியீடு!

-

- Advertisement -

விடாமுயற்சி படத்திலிருந்து சவதீகா ரீலோடட் வெர்ஷன் வெளியாகி உள்ளது.'சவதீகா ரீலோடட்' வெர்ஷன் வெளியீடு!

அஜித்தின் 62 ஆவது படமாக உருவாகியிருக்கும் திரைப்படம் தான் விடாமுயற்சி. இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைத்திருக்கிறார். ஓம் பிரகாஷ் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்க வில்லனாக அர்ஜுன் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து ஆரவ், ரெஜினா மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இப்படம் உருவாகி இருக்கிறது. அதன்படி இந்த படமானது காதல் கலந்த ஆக்சன் படமாக உருவாகியுள்ளது. கடந்த பொங்கலுக்கு வெளியாக இருந்த இந்த படம் வருகின்ற பிப்ரவரி 6ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தின் டீசர், ட்ரெய்லர் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் அடுத்தடுத்த போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிற அதே சமயம் இந்த படத்தில் இருந்து சவதீகா பாடல் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. இந்நிலையில் சவதீகா ரீலோடட் வெர்ஷனை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலை அந்தோணி தாசன், அனிருத் ஆகிய இருவரும் பாடி இருந்த நிலையில் இப்படம் தற்போது The ANI X ANTO வெர்ஷனில் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ