Homeசெய்திகள்தமிழ்நாடுகுரூப் 4 தேர்வு முடிவுகளில் முறைகேடு?

குரூப் 4 தேர்வு முடிவுகளில் முறைகேடு?

-

குரூப் 4 தேர்வு முடிவுகளில் முறைகேடு?

குரூப் 4 தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள முடியவில்லை என ஏராளாமான தேர்வர்கள் புகார் எழுந்துள்ளது.

டி.என்.பி.எஸ்.சி.

தமிழ்நாடு அரசுத்துறைகளுக்கு 1089 நில அளவர், வரைவாளர்களை தேர்வு செய்வதற்காக கடந்த நவம்பர் மாதம் நடத்தப்பட்ட TNPSC போட்டித்தேர்வில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய ஏறக்குறைய 700 பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். மொத்தமாக தேர்ச்சி பெற்ற 700 பேரும் காரைக்குடியில் உள்ள நடுவத்தில் தேர்வு எழுதியுள்ளனர். அவர்களின் பெரும்பான்மையினர் காரைக்குடியில் உள்ள தனியார் பயிற்சி நடுவத்தில் பயிற்சி பெற்றவர்கள். வெற்றி பெற்றவர்கள் முறையாக பயின்று திறமையால் தேர்வில் வெற்றி பெற்றிருந்தால் மகிழ்ச்சி தான். ஆனால், மொத்த பணியிடங்களில் 70% இடங்களுக்கு ஒரே மையத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் இணையதளத்தில் தேர்வு எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்தும் முடிவுகளை அறிய முடியவில்லை. பாதிக்கப்பட்ட தேர்வர்கள் சென்னை டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்திற்கு முறையிட நேரில் வருகை தந்துள்ளனர்.

MUST READ