பாவனா நடிக்கும் தி டோர் படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது.நடிகை பாவனா தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அந்த வகையில் இவர் தமிழில் சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து இவர் வெயில், கூடல் நகர், தீபாவளி, ஜெயங்கொண்டான், அசல் என பல படங்களில் நடித்து பெயரையும் புகழையும் பெற்றுள்ளார். அந்த வகையில் தீபாவளி படத்தில் இவர் நடனமாடி இருந்த கண்ணன் வரும் வேலை பாடலும், அசல் படத்தில் இடம்பெற்ற ஏ துஸ்ஸந்தா பாடலும் இன்று வரையிலும் ரசிகர்களின் பேவரைட்டாக இருக்கிறது. அதன் பிறகு பெரிய அளவில் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட பாவனா நீண்ட இடைவெளிக்கு பிறகு தி டோர் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை ஜெய் தேவ் இயக்குகிறார். ஜூன் ட்ரீம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் நவீன் ராஜன் இந்த படத்தை தயாரித்துள்ளார்.
First Look motion Poster of Bhavana’s mystery thriller #TheDoor pic.twitter.com/jiNZ9rV7sO
— AmuthaBharathi (@CinemaWithAB) February 1, 2025
மிஸ்டரி திரில்லர் கதைக்களத்தில் உருவாகும் இந்த படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்திய அளவில் உருவாகி வருகிறது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.