சிம்புவின் பிறந்தநாளான இன்று தக் லைஃப் படத்திலிருந்து ஸ்பெஷல் வீடியோ வெளியாகி உள்ளது.
நடிகர் சிம்பு தற்போது தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி வருகிறார். அதன்படி பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தின் தன்னுடைய 49வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார் சிம்பு. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதற்கு முன்னதாக தேசிங்கு பெரியசாமி, அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதற்கிடையில் இவர், மணிரத்னம், கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அதாவது கமல்ஹாசனுக்கு மகனாக நடித்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இதற்கு இசை அமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. மேலும் இப்படமானது 2025 ஜூன் 5ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
Wishing you a Happy Birthday @SilambarasanTR_#HappyBirthdaySTR#ThuglifeFromJune5 #KamalHaasan #SilambarasanTR
A #ManiRatnam Film@ikamalhaasan #ManiRatnam @arrahman #Mahendran @bagapath @trishtrashers @AshokSelvan @AishuL_ @C_I_N_E_M_A_A @abhiramiact #Nasser… pic.twitter.com/IrUiWaGo76
— Raaj Kamal Films International (@RKFI) February 3, 2025
இந்நிலையில் இன்று (பிப்ரவரி 3) நடிகர் சிம்புவின் 41வது பிறந்த நாளை முன்னிட்டு தக் லைஃப் படத்திலிருந்து ஏ ஆர் ரகுமானின் இசையுடன் ஸ்பெஷல் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. சிம்புவிற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக வெளியான இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.