காந்தா படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.துல்கர் சல்மான் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர். அதே சமயம் இவர் சீதாராமம் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இந்திய அளவில் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருக்கிறார். இவரது நடிப்பில் கடந்தாண்டு தீபாவளி தினத்தன்று லக்கி பாஸ்கர் திரைப்படம் வெளியானது. கிரைம் திரில்லர் கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. மேலும் துல்கர் சல்மான், ஆர் டி எக்ஸ் படத்தின் இயக்குனர் நிகாஸ் ஹிதாயத் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கிறார். இதற்கிடையில் இவர் தெலுங்கு நடிகர் ராணா டகுபதியின் தயாரிப்பில் உருவாகும் காந்தா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை செல்வராஜ் செல்வமணி எழுதி, இயக்குகிறார். இந்த படத்தில் துல்கர் சல்மான் உடன் இணைந்து பாக்கியஸ்ரீ போர்ஸ், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காந்தா படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று (பிப்ரவரி 3) மாலை 5:04 மணியளவில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
- Advertisement -