நிலக்கடலை என்பது சர்க்கரை நோய்க்கு தீர்வு தருவதாக தெரியவந்துள்ளது.
நிலக்கடலையில் அதிக அளவில் புரதச்சத்து இருக்கிறது. அதன்படி காய்கறிகள், முட்டை, இறைச்சி ஆகியவற்றை விட நிலக்கடையில் இருக்கும் புரதம் அதிகம். மேலும் ஒரு மனிதனுக்கு தேவையான கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், ஜிங்க், பாஸ்பரஸ், வைட்டமின் பி1, பி3, பி5, பி6, பி9 ஆகிய சத்துக்கள் அனைத்தும் இந்த நிலக்கடலையில் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் பழங்கள், காய்கறிகளை விட 21 சதவீத கார்போஹைட்ரேட்டும், 9 சதவீத நார்ச்சத்தும் இதில் கிடைக்கிறது. எனவே மிகச் சிறந்த உணவுகளில் நிலக்கடலையும் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. எனவே உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தங்களுடைய தினசரி டயட் லிஸ்டில் நிலக்கடலையும் சேர்த்துக் கொள்ளலாம். அடுத்தது நிலக்கடலை, சர்க்கரை நோயாளிகளுக்கு நண்பனாகவும் இருக்கிறது என்றே சொல்லலாம். ஏனென்றால் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறுநீர் கழிக்கும் போது புரதம் வெளியேறும். சர்க்கரை நோயாளிகள் சாப்பிடும் உணவுகளில் உள்ள புரதங்கள் சிறுநீர் வழியே வெளியேறி விடுவதனால் அவர்களுக்கு சோர்வு ஏற்படும். மேலும் பசி அதிகரிக்கும். எனவே இதை தடுக்க சர்க்கரை நோயாளிகள் நிலக்கடலையை எடுத்துக் கொள்வது நல்லது. இது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு அதிகமான பசி ஏற்படுவதையும் கட்டுப்படுத்துகிறது. இருப்பினும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.