Homeசெய்திகள்சென்னை3வது தமிழ்நாடு காலநிலை மாற்ற உச்சி மாநாடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடக்கம்

3வது தமிழ்நாடு காலநிலை மாற்ற உச்சி மாநாடு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடக்கம்

-

- Advertisement -

சென்னையில் நாளை தொடங்கி 2 நாட்கள் நடைபெறும் 3வது தமிழ்நாடு காலநிலை மாற்ற உச்சி மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மேலும் சுற்றுச்சூழல் விருதுகளை வழங்கி பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

3வது தமிழ்நாடு காலநிலை மாற்ற உச்சி மாநாடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடக்கம்காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் பொருட்டு பல்வேறு தொலைநோக்கு முயற்சிகளை மேற்கொள்வதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.

இதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு ஆண்டும் கால நிலை மாற்ற உச்சி மாநாடு நடத்தப்படுகிறது. இதன்படி 3வது தமிழ்நாடு காலநிலை மாற்ற உச்சி மாநாட்டை ( TAMIL NADU CLIMATE SUMMIT 3.0) நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் தொடக்க விழாவில் கழிவுகளை மறு சுழற்சி செய்வதற்கான இணையதளம், தொழிற்சாலைகளுக்கான பசுமை குறியீடு, கால நிலை ஏற்ற வாழ்க்கை முறை, கார்பன் சமநிலை ராஜபாளையம் திட்டத்திற்கான செயல்திட்ட அறிக்கை ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மேலும், சுற்றுச்சூழல் விருதுகளையும் வழங்க உள்ளார்.

4 மற்றும் 5 நாட்கள் நடைபெறும் இந்த உச்ச மாநாட்டில் 8 அமர்வுகளில் பல்வேறு துறை வல்லுனர்கள் கலந்து கொண்டு தங்களின் கருத்துகளை பகிர உள்ளனர்.

MUST READ