- Advertisement -
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடிகம்பம் அமைக்க அனுமதி கோரிய விண்ணப்பம் மீது ஆறு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை அமைந்தகரையில் உள்ள திருவீதி அம்மன் கோவில் தெருவில் தமிழக வெற்றிக் கழக கொடிக்கம்பம் அமைக்க அனுமதி அளிக்கும்படி சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிடக் கோரி, வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் சரத் குமார் வழக்கு பதிவு செய்துள்ளாா். தமிழக வெற்றிக் கழக கட்சிக் கொடிக்கம்பம் அமைக்க அனுமதி கோரி சென்னை மாநகராட்சிக்கு விண்ணப்பித்தும், எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என மனு அளிக்கபட்டதை அடுத்து ஆறு வாரங்களில் முடிவு எடுக்க வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தவு பிறப்பித்துள்ளது.