பிரபல நடிகை பார்வதி நாயர் தான் தொழிலதிபரை காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் நடைபெறப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.நடிகை பார்வதி நாயர் ஆரம்பத்தில் மலையாள திரைப்படங்களின் மூலம் நடிகையாக அறிமுகமானவர். தற்போது இவர் மலையாள மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தமிழில் இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான நிமிர்ந்து நில் படத்தின் மூலம் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து என்னை அறிந்தால், உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக ஆகிய படங்களில் நடித்த இவர் கடந்த ஆண்டில் விஜய் நடிப்பில் வெளியான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில் பார்வதி நாயர் தன்னுடைய காதலர் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதன்படி பேட்டி ஒன்றில் பேசிய அவர், ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் அஸ்ரித்தை தான் காதலிப்பதாகவும் விரைவில் இருவரின் திருமணம் தெலுங்கு மற்றும் மலையாள பாரம்பரிய முறைப்படி நடைபெறும் என தெரிவித்திருக்கிறார். எனவே இனிவரும் நாட்களில் பார்வதி நாயரின் திருமணம் குறித்த அப்டேட் வெளியாகும் என நம்பப்படுகிறது. மேலும் இந்த தகவல் அறிந்த ரசிகர்களும் பார்வதி நாயருக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
- Advertisement -