Homeசெய்திகள்அரசியல்“கும்பமேளா விபத்து குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம்….  எதிர்க்கட்சி எம்.பி-க்கள் வெளிநடப்பு!!

“கும்பமேளா விபத்து குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம்….  எதிர்க்கட்சி எம்.பி-க்கள் வெளிநடப்பு!!

-

- Advertisement -

கும்பமேளா விபத்து” நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த முன்வைத்த கோரிக்கை ஏற்கப்படாத காரணத்தினால் மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி-க்கள் வெளிநடப்பு!!“கும்பமேளா விபத்து குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம்….  எதிர்க்கட்சி எம்.பி-க்கள் வெளிநடப்பு!!

உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 30 பேர் வரை உயிரிழந்தனர். இந்நிலையில் டெல்லியில் நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி எம்பிக்கள் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மகா கும்பமேளா விபத்து குறித்து விவாதம் நடத்த கோரி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்களவையில் இவ்விவகாரம் காரணமாக கடும் அமளி நீடித்து வரும் நிலையில் மாநிலங்களவையில் அவை தலைவரால், எதிர்க்கட்சிகளின் விவாத கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் அவை நடவடிக்கையை புறக்கணித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த பிறகு பாஜக மற்றும் கட்சியின் கூட்டணி கட்சிகளை சேர்ந்த மாநிலங்களவை குழு தலைவர்கள் குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் பங்கேற்று வருகின்றனர்.

பிரதமர் மோடியின் நண்பர்களுக்கான பட்ஜெட் – ஜோதிமணி சீற்றம்

MUST READ