Homeசெய்திகள்சினிமாசல்மான்கானை இயக்கும் 'பில்லா' பட இயக்குனர்!

சல்மான்கானை இயக்கும் ‘பில்லா’ பட இயக்குனர்!

-

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷ்ணுவரதன். இவர் அஜித்தின் பில்லா, ஆரம்பம் ஆகிய படங்களை இயக்கிய ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். சல்மான்கானை இயக்கும் 'பில்லா' பட இயக்குனர்!மேலும் சமீபத்தில் இவரது இயக்கத்தில் நேசிப்பாயா எனும் திரைப்படம் வெளியானது. அடுத்தது இவர், மீண்டும் அஜித்தை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாகவும் இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கப் போவதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் விஷ்ணுவரதன், சல்மான் கான் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போகிறார் என்று லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி விஷ்ணுவரதன், சல்மான் கான் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தை பிரபல தெலுங்கு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. சல்மான்கானை இயக்கும் 'பில்லா' பட இயக்குனர்!அதுமட்டுமில்லாமல் இந்த படத்திற்கு The Bull என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இனிவரும் நாட்களில் இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் நடிகர் சல்மான் கான் தற்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிக்கந்தர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதே சமயம் இவர், அட்லீ இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கப் போகிறார் எனவும் செய்திகள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

MUST READ