அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
சிம்பு நடிப்பில் கடைசியாக பத்து தல திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து சிம்பு தக் லைஃப் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் 2025 ஜூன் 5-ம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. அதேசமயம் இன்று (பிப்ரவரி 3) சிம்புவின் 41வது பிறந்த நாளை முன்னிட்டு அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் நடிகர் சிம்பு, பார்க்கிங் படத்தின் இயக்குனர் ராம்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 49 வது திரைப்படத்தின் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் நடிகர் சிம்பு பொறியியல் மாணவனாக நடிக்கிறார். இந்த படம் தொடர்பான அறிவிப்பு நள்ளிரவு 12 மணி அளவில் வெளியானது. அதைத்தொடர்ந்து தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் STR 50 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது.
காதல் இருக்கும் பயத்தினில் தான் கடவுள் பூமிக்கு வருவதில்லை…
மீறி அவன் பூமி வந்தால்…?❤️🔥🔥#HBDSilambarasanTRKattam Katti Kalakrom 🔥#VintageSTRmood#STR51 #AGS27#KalpathiSAghoram #KalpathiSGanesh #KalpathiSSuresh@SilambarasanTR_ @Dir_Ashwath@archanakalpathi… pic.twitter.com/aC0V10D2Qb
— AGS Entertainment (@Ags_production) February 3, 2025
அடுத்ததாக STR 51 படத்தின் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த படத்தில் நடிகர் சிம்பு, காதலின் கடவுளாக நடிக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதை பார்க்கும் போது இந்த படம் பேண்டஸி கதைக்களம் போல் தெரிகிறது. இது தொடர்பாக வெளியான போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படத்தை ஏற்கனவே ஆஸ்வத் மாரிமுத்து இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை தயாரிப்பதாக அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.