Homeசெய்திகள்சினிமாஇது பாகுபலி மாதிரி இருக்காது ஆனால்.... 'STR 50' குறித்து சிம்பு!

இது பாகுபலி மாதிரி இருக்காது ஆனால்…. ‘STR 50’ குறித்து சிம்பு!

-

- Advertisement -

நடிகர் சிம்பு தற்போது மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ஆக்சன் கலந்த கதைக்களத்தில் உருவாகும் இந்த படம் 2025 ஜூன் 5 அன்று திரைக்கு வர தயாராகி வருகிறது.இது பாகுபலி மாதிரி இருக்காது ஆனால்.... 'STR 50' குறித்து சிம்பு! இதைத் தொடர்ந்து நடிகர் சிம்பு, பார்க்கிங் படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் தனது 49வது திரைப்படத்திலும் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் 51வது திரைப்படத்திலும் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கிறார். இதற்கிடையில் இவர், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 50வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். ஏற்கனவே இந்த திட்டம் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் ஒரு சில காரணங்களால் தற்போது சிம்புவே இந்த படத்தின் தயாரிப்பாளராக மாறியுள்ளார். இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். நேற்று (பிப்ரவரி 3) சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு இது தொடர்பான அறிவிப்பு போஸ்டர் வெளியானது. அதே சமயம் ஏற்கனவே வெளியான தகவலின் படி இந்த படம் பீரியாடிக் கதைக்களத்தில் உருவாகிறது என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் நடிகர் சிம்பு, STR 50 குறித்து பேசி உள்ளார்.இது பாகுபலி மாதிரி இருக்காது ஆனால்.... 'STR 50' குறித்து சிம்பு! அவர் பேசியதாவது, “அடுத்த மாதம் இந்த படத்தின் ப்ரோமோ படப்பிடிப்பை நடத்த இருக்கிறோம். ப்ரோமோ நன்றாக வந்தால் வெளியிடுவோம். அதனால்தான் இந்த கெட்டப்பை மாற்றாமல் இருக்கிறேன். இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிறது. ஓடிடி, சாட்டிலைட் மார்க்கெட் குறைந்துவிட்டது. அதனால்தான் இந்த படத்தை நானே தயாரிக்கிறேன். இப்படம் பாகுபலி மாதிரி இல்லை. ஆனால் தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்க்கும்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ