பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன், சிம்பு கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் ஷூட்டிங் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஹரிஷ் கல்யாண், எம். எஸ். பாஸ்கர், இந்துஜா ஆகியோரின் நடிப்பில் பார்க்கிங் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியிருந்தார். ஈகோ கிளாஸ் சம்பந்தமான கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து ராம்குமார் பாலகிருஷ்ணன், சிம்பு நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இந்த படத்திற்கு தற்காலிகமாக STR 49 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர் சிம்பு, இன்ஜினியரிங் மாணவனாக நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் குறித்த தகவல் வெளியாகி இருக்கின்றன. அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பு 2025 மார்ச் மாதத்தின் இறுதியில் அல்லது ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் நடைபெறும் என சொல்லப்படுகிறது. அடுத்தது இந்த படத்தினை 2025 தீபாவளி அல்லது கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது. விரைவில் இந்த படம் தொடர்பான மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.
- Advertisement -