விஷ்ணு விஷால் நடிக்கும் ஆர்யன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
நடிகர் விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். அதன்படி மாறுபட்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கக்கூடிய இவர் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். தற்போது இவர் தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் ஓர் மாம்பழ சீசனில், மோகன்தாஸ், VV21 ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதற்கிடையில் இவர், ஆர்யன் எனும் திரைப்படத்தில் நடித்து வந்தார். ராட்சசன் படத்திற்கு பிறகு இந்த படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். திரில்லர் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் விஷ்ணு விஷால் உடன் இணைந்து வாணி போஜன், ஸ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை விஷ்ணு விஷால் தனது விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கிறார். சாம் சி எஸ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
I just have one promise to make today ❤️#Aaryan will be a unique viewing experience to all the audiences..
Shoot wrapped! pic.twitter.com/08hBXLXxXR
— VISHNU VISHAL – VV (@TheVishnuVishal) February 3, 2025
இந்த படம் கடந்த 2022 ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டது. அதன் பின்னர் சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எனவே இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.