Homeசெய்திகள்தமிழ்நாடுஆபத்தான முறையில் ரீல்ஸ் பதிவேற்றம் - ஓட்டுனர் மற்றும் நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஆபத்தான முறையில் ரீல்ஸ் பதிவேற்றம் – ஓட்டுனர் மற்றும் நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

-

- Advertisement -

சென்னையில் ஆபத்தான முறையில்  அரசு மாநகரப் பேருந்தை இயக்கியப்படியே ரீல்ஸ் பதிவிட்ட ஓட்டுனர் மற்றும் நடத்துநர்  விதிமுறைகளை மீறி பயணிகளுடன் ஆபத்தான முறையில் ரீல்ஸ் பதிவேற்றம் செய்த போக்குவரத்து ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.ஆபத்தான முறையில் ரீல்ஸ் பதிவேற்றம் - ஓட்டுனர் மற்றும் நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்க கோரிகை

சென்னை வடபழனி பணிமனைகள் தற்காலிக ஓட்டுனர் மற்றும் நடத்துனராக பணியாற்றி வருபவர்கள் இன்று பயணிகளுடன் பேருந்து இயக்கிக் கொண்டிருக்கும்போது ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுத்து தங்களது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருப்பது பெரும் சர்ச்சை ஆகியுள்ளது.

குறிப்பாக அரசு பேருந்து ஓட்டுநர்கள் பணியின் போது செல்போன்கள் பயன்படுத்தக் கூடாது என போக்குவரத்து கழகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது ஆனால் அதனையும் மீறி வடபழனிமனையில் பணியாற்றும் ஊழியர்கள் தற்போது ரிலீஸ் எடுத்து பதிவிட்டுள்ளனர்.

கடந்த 2024 ஆம் ஆண்டு மட்டும் ஒட்டுமொத்தமாக அரசு பேருந்துகளின் வாயிலாக 1300 மேற்பட்ட விபத்துக்கள் நடைபெற்றுள்ளது அதில் 78 நபர்கள் உயிரிழந்துள்ளனர், வாகனத்தை இயக்கும் போது இது போன்று ஆபத்தான முறையில் மொபைல் ஃபோன்களை பயன்படுத்துவது ரீல்ஸ் எடுப்பது உள்ளிட்ட காரணங்களால் விபத்துக்கள் அதிகரிப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல் நிலையத்துக்கே பாதுகாப்பு இல்லை  – கொந்தளிக்கும் அன்புமணி ராமதாஸ்

MUST READ