சூப்பர் ஸ்டார் என்று அன்று முதல் இன்று வரை கோடான கோடி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் ரஜினி. இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். அடுத்தது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் தான் நடிகை மாளவிகா மோகனன், ரஜினியின் மகளாக நடிக்கும் வாய்ப்பை இழந்ததாக வருத்தம் தெரிவித்துள்ளார். நடிகை மாளவிகா மோகனன், விஜயின் மாஸ்டர், விக்ரமின் தங்கலான் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பெயர் பெற்றவர். இவர் தற்போது கார்த்தியின் சர்தார் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் இவர் ஏற்கனவே ரஜினியின் பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்நிலையில் இவருக்கு மீண்டும் ரஜினியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இது குறித்து பேசிய மாளவிகா மோகனன், மாஸ்டர் படத்திற்கு பிறகு லோகேஷ், ரஜினி கூட்டணியில் உருவாக இருந்த புதிய படத்தில் ரஜினிக்கு மகளாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும் கொரோனா காலகட்டத்தினால் அது நடக்கவில்லை எனவும் வருத்தம் தெரிவித்துள்ளார். அதாவது கமல்ஹாசன் தயாரிப்பில் லோகேஷ் புதிய படம் ஒன்றை இயக்க இருந்தாராம். அந்த படத்தில் தான் ரஜினி நடிக்க இருந்தாராம். ஒரு சில காரணங்களால் இந்த படம் நடக்காமல் போக லோகேஷ் கமலை வைத்து விக்ரம் படத்தை இயக்கினாராம். அதன் பின்னர்தான் கூலி திரைப்படம் உருவாகி வருகிறது. ஆகையினால் அப்போது நடக்காத படம் தான் கூலி திரைப்படமா? இல்லையெனில் இது வேறு ஒரு புதிய படமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
- Advertisement -