மணிகண்டனின் குடும்பஸ்தன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழ் சினிமாவில் விக்ரம் வேதா, காலா ஆகிய படங்களில் நடிக்க தொடங்கியவர் மணிகண்டன். இவருடைய எதார்த்தமான நடிப்புக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் ஜெய் பீம் படத்தில் இவருடைய நடிப்பு பெரிய அளவில் பாராட்டப்பட்டு இன்று வரையிலும் பேசப்படுகிறது. அதை தொடர்ந்து இவர், அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அதன்படி இவர் ஹீரோவாக நடித்திருந்த குட் நைட், லவ்வர் ஆகிய படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அடுத்தது இவரது நடிப்பில் குடும்பஸ்தன் எனும் திரைப்படம் உருவாகி இருந்த நிலையில் இப்படம் கடந்த ஜனவரி 24ஆம் தேதி திரைக்கு வந்தது. காமெடி கலந்த கதைக்களத்தில் வெளியான இந்த படம் வெளியான முதல் நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று தொடர்ந்து வெற்றிப் பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. எனவே இரண்டு வாரங்களை கடந்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் குடும்பஸ்தன் திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 20 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.