Homeசெய்திகள்சென்னைவண்ணாரப்பேட்டை: சுரங்கப்பாதை பணியின் மெத்தனப் போக்கை கண்டித்து சாலை மறியல்

வண்ணாரப்பேட்டை: சுரங்கப்பாதை பணியின் மெத்தனப் போக்கை கண்டித்து சாலை மறியல்

-

- Advertisement -

சென்னை வண்ணாரப்பேட்டை போஜராஜன் நகர் மின்ட் மாடர்ன் சிட்டி சீனிவாசபுரம் பகுதியில் ஏறத்தாழ சுமார் 6000 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.  இந்நிலையில் வண்ணாரப்பேட்டை போஜராஜன் நகர்  ரயில்வே சுரங்கப்பாதை பணிகள் ஒன்பது ஆண்டுகளாக முடிவடையாததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.வண்ணாரப்பேட்டை: சுரங்கப்பாதை பணியின் மெத்தனப் போக்கை கண்டித்து சாலை மறியல்

இந்த பகுதியிலிருந்து தினம் தோறும் பணிக்கு செல்வது, பள்ளி கல்லூரிக்கு செல்வது போன்ற  அத்தியாவசிய தேவைக்கு வெளியே வரும் மக்கள் இந்த ரயில் தண்டவாளங்களை கடந்து சென்றால் மட்டுமே வெளியேற முடியும் என்ற சூழ்நிலை தொடர்ந்து வந்த நிலையில் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக 2010 ஆம் ஆண்டு சுரங்கப்பாதை அமைப்பதற்கான  நிதி ஒதுக்கப்பட்டு 2016 ஆம் ஆண்டு பணிகள் துவங்கப்பட்டது. வண்ணாரப்பேட்டை: சுரங்கப்பாதை பணியின் மெத்தனப் போக்கை கண்டித்து சாலை மறியல்

கிட்டத்தட்ட கடந்த 9 வருடங்களாக சுரங்கப்பாதை பணியை முடிக்காமல் மெத்தனப் போக்கில் நடைபெற்று வருகின்றன. பணிகள் முடிய இன்னும் இரண்டு ஆண்டு காலம் ஆகும் என்று சூழ்நிலை உருவாகிய நிலையில்   சீனிவாசபுரம் போஜராஜன் நகர் மின்ட் மாடல் சிட்டி உள்ளிட்ட பகுதியில் இருக்கும் சுமார் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டானா அருகே இருபுறமும் பேருந்துகளை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாஞ்சோலை மக்களின் வாழ்வுரிமையை மலையகத்திலேயே நிலைநாட்டுங்கள்.! – டாக்டர் க.கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

MUST READ