STR 49 படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவர் தற்போது மணிரத்னம் கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி இருக்கும் தக் லைஃப் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படம் 2025 ஜூன் மாதம் திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் நடிகர் சிம்பு, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு கமிட் ஆகியிருந்தார். அதேபோல் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் தனது 51வது திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். மேலும் இவர், பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் தனது 49வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு 2025 மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் என சொல்லப்படுகிறது. சமீபத்தில் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அந்த அறிவிப்பு போஸ்டரை பார்க்கும்போது நடிகர் சிம்பு, இன்ஜினியரிங் காலேஜ் ஸ்டுடென்டாக நடிக்கிறார் போல் தெரிந்தது. ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், நடிகர் சிம்பு, STR 49 படத்தில் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார் என்று புதிய தகவல் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த படம் தொடர்பாக வெளியான போஸ்டரில் ‘The Most wanted Student’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் ரசிகர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சிம்பு இப்படத்தில் மாணவனாக நடிக்கிறாரா? அல்லது பேராசிரியராக நடிக்கிறாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.