Homeசெய்திகள்சினிமாநடிகர் சிவகார்த்திகேயன் வீட்டில் நடந்த விசேஷம்!

நடிகர் சிவகார்த்திகேயன் வீட்டில் நடந்த விசேஷம்!

-

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் தற்போது தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக இவர் அமரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். நடிகர் சிவகார்த்திகேயன் வீட்டில் நடந்த விசேஷம்!அடுத்தது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அதன் பின்னர் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் தனது 25வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்திற்கு பராசக்தி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் சிபி சக்கரவர்த்தி, விநாயகக் சந்திரசேகரன் ஆகியோரின் இயக்கத்தின் தனது அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இவ்வாறு பிசியான நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் திரைத்துறைக்கு வருவதற்கு முன்பாகவே தனது தாய் மாமாவின் மகள் ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார். சிவகார்த்திகேயன் – ஆர்த்தி தம்பதியினருக்கு ஆராதனா என்ற மகளும் குகன், பவன் என்ற இரு மகன்களும் இருக்கின்றனர்.நடிகர் சிவகார்த்திகேயன் வீட்டில் நடந்த விசேஷம்! இந்நிலையில் சிவகார்த்திகேயன் தன்னுடைய இளைய மகன் பவனுக்கு திருவாரூரில் உள்ள தன் சொந்த ஊரான திருவீழிமிழலை என்ற கிராமத்தில் காதணி விழா நடத்தியுள்ளார். இந்த விழாவின்போது அப்பகுதி மக்கள் சிவகார்த்திகேயனை பார்த்தவுடன் அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இது சம்பந்தமான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ