Homeசெய்திகள்சினிமாஇயக்குனர் மடோனிடம் நிறைய கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்

இயக்குனர் மடோனிடம் நிறைய கற்றுக் கொண்டேன் – சிவகார்த்திகேயன்

-

- Advertisement -

மாவீரன் படத்தை நிறைவு செய்துள்ளேன் இயக்குனர் மடோன் அஷ்வினுடம் நிறைய கற்று கொண்டேன் என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்தார்!

சென்னை சத்யம் திரையரங்கில் கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள ஆகஸ்ட் 16 1947 படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,

மாவீரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தான் முடிந்தது அடுத்து நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தான் நடிக்கிறேன்.

பல மேடைகளில் ரஜினி போன்று தான் மிமிக்ரி செய்துள்ளேன். அவருடைய சாயல் என்னிடம் இருப்பது சந்தோஷம்தான். மேலும், நம் நாட்டைச் சேர்ந்த குறும்படம் ஒன்று ஆஸ்கர் விருது வென்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.

மாவீரன் திரைப்பட இயக்குனரோடு தங்களுக்கு மன சங்கடம் ஏற்பட்டுள்ளதா? என்ற கேள்விக்கு, அவ்வாறு எதுவும் இல்லை ஏன் அது போன்ற செய்தி பரவியது என்று தெரியவில்லை, இயக்குனர் மடோன் இடமிருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன் என கூறினார்.

நடிகர் அஜித்தின் தந்தை மறைவின் போது படப்பிடிப்பில் இருந்தேன் பிறகு அவரை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன் என்று தெரிவித்தார்.

MUST READ