திருப்பரங்குன்றம் கோவில் விவகாரத்தில் இரு மதங்களுக்கு இடையே வன்முறையை தூண்டும் விதாக பேசிய பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மீது காவல்துறையினர் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலை மீது அமைந்துள்ள தர்காவில் ஆடு, கோழி பலியிடவும், மலை முழுவதும் முருகன் கோவிலுக்கு சொந்தம் என கூறியும் நேற்று முன்தினம் திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணி உள்ளிட்ட வலதுசாரி அமைப்பினர் தடையை மீறி போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைதுசெய்து, பின்னர் விடுவித்தனர். இந்த நிலையில், போராட்டம் தொடர்பாக இந்து முன்னணி, பாஜகவை சேர்ந்த 195 பேர் மீது காவல் துறையினர் நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில், திருப்பரங்குன்றம் கோவில் விவகாரம் தொடர்பாக நேற்று முன்தினம் மதுரை பழங்காநத்தத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த நிலையில், ஹெச்.ராஜாவின் பேச்சு தொடர்பாக மதுரை சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்தில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இரு மதங்களுக்கு இடையே வன்முறையை தூண்டும் விதமாக பேசியது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் ஹெச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.