கர்நாடக தலைநகர் பெங்களூருவின் மாருதி நகரில், ஒரு வீட்டில் கடந்த ஜனவரி 9ம் தேதி 14 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் கொள்ளை போயிருக்கிறது.வீட்டின் உரிமையாளர் தந்த புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்டு, இறுதியில், கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்களின் அடிப்படையில் பஞ்சாக்ஷரி எஸ்.சாமி என்ற கொள்ளையனை கைது செய்தனர். அவனுக்கு 37 வயதாகிறது.
இதுகுறித்து கர்நாடக மாநிலம், பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்தா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் “பெங்களூரில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய, மஹாராஷ்டிரா மாநிலம், சோலாப்பூரை சேர்ந்த பஞ்சாக்ஷரி சாமி, 37, என்பவரை போலீசார் கைது செய்திருக்கின்றனர். அவரிடமிருந்து 181 கிராம் தங்க கட்டிகள், 333 கிராம் வெள்ளி பொருட்கள், தங்கத்தை உருக்க பயன்படுத்தப்படும் கம்பி, ஒரு துப்பாக்கி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
சாமிக்கு திருமணமாகி மனைவி, 1 குழந்தை இருக்கிறார்கள்.. சோலாப்பூரில் 400 சதுர அடி வீட்டில் தான் அவரது அம்மா, குழந்தைகள் வசிக்கிறார்கள்.. இந்த வீட்டின் கடனையே அவர் ஒழுங்காக செலுத்தவில்லை.. இதனால் வீட்டின் மீதான கடனை செலுத்தாததால், வீடு தற்போது ஏலத்திற்கு வந்துள்ளது.. கடந்த 2003ல் மைனராக இருந்தபோதே, சாமி திருட ஆரம்பித்துவிட்டார்.. 2009ல் இருந்து தொழில் முறை திருடனாக மாறிவிட்டார்” என்றார்.கொள்ளையன் சாமி கைதானது குறித்து, தனிப்படை போலீஸ் அதிகாரி ஒருவர் சொல்லும்போது, “கடந்த 2003ம் ஆண்டில் சிறுவனாக இருந்தபோதே, திருட்டு, கொள்ளை போன்ற சம்பவங்களில் எஸ்.சாமி ஈடுபட்டு வந்தார். கடந்த 2009ம் ஆண்டு வாக்கில், முழு நேர திருடனாக மாறினான். கோடிக் கணக்கில் பணம் சம்பாதித்துள்ளான்.
கடந்த 2014-15ம் ஆண்டில், நடிகை ஒருவருடன் அவனுக்கு தொடர்பு ஏற்பட்டது. அந்த நடிகைக்கு கொல்கத்தாவில் 3 கோடி ரூபாய் மதிப்பில் வீட்டைக் கட்டிக் கொடுத்துள்ளான். மேலும் 22 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீன் பண்ணையை அமைத்து கொடுத்துள்ளான்… இவ்வளவும் திருட்டு பணத்தில்தான் செய்துள்ளான்.. ஒவ்வொரு முறை நடிகையின் வீட்டுக்கு இவன் செல்லும்போது 15 லட்சம் ரூபாய் வரை ஆடம்பரமாக செலவு செய்து உல்லாசமாக இருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இதனால், சாமி மீதான திருட்டு வழக்குகள் அதிகமாக இருந்தன.. எனவே, பல மாநில போலீசாரும் அவனை தேடி வந்தனர். கடந்த 2016ம் ஆண்டில், குஜராத் போலீசார் எஸ்.சாமியை கைது செய்தனர். இதன்காரணமாக, அகமதாபாத்தில் உள்ள சபர்மதி மத்திய சிறையில் 6 வருடங்கள் ஜெயில் தண்டனையை அனுபவித்தான்.
ஜெயிலிலிருந்து வெளியே வந்ததுமே மறுபடியும் திருட்டு, கொள்ளையில் ஈடுபட்டார்.. பிறகு மகாராஷ்டிரா போலீசாரால் கைது செய்யப்பட்டார். கடந்த வருடம் ஜெயிலிலிருந்து வெளியே வந்து, பெங்களூருவிற்கு குடிவந்துவிட்டார்.. சில மாதங்களில் கர்நாடகாவில் தன்னுடைய திருட்டு, தொழிலை ஆரம்பித்துள்ளான்.. பெலகாவியிலும் எஸ்.சாமி மீது திருட்டு கேஸ் இருக்கிறது” என்று தனிப்படை போலீஸ் அதிகாரி கூறினார்.
தற்போது கைதாகி உள்ள எஸ்.சாமிக்கு, கராத்தே நன்றாக தெரியுமாம்.. பிளாக் பெல்ட் வைத்திருக்கிறாராம். பங்களா வாங்கி தந்த நடிகையை தவிர, வேறு சில நடிகைகளுடன் தொடர்பு இருந்துள்ளதாக சொல்கிறார்கள்.ஏதாவது ஓரிடத்தில் திருடிவிட்டால், உடனே புதுப்புது டிரஸ்களை அணிந்து கொண்டு, அந்த ஏரியாவை விட்டே கிளம்பிவிடுவாராம். இவரது அப்பா ரயில்வேயில் இறந்ததுமே, வேலை சாமியின் அம்மாவுக்கு கிடைத்துள்ளது.அந்தம்மா குடியிருந்து வரும் அந்த வீடும், பணம் கட்டாமல் ஏலத்துக்கு வந்துவிட்டதாம். ஆனால், கடந்த 20 வருடங்களாக திருட்டு, கொள்ளையில் ஈடுபட்டு வந்து, ஒரு நடிகைக்கு 3 கோடியில் பங்களா வாங்கி தந்ததும், மீன் பண்ணை வைத்து கொடுத்ததும் வியப்பை அளிக்கிறது . அந்த நடிகை யார் என்று தெரியவில்லை.
இந்த நிலையில் கொள்ளையன் சாமிக்கு நடிகையைத் தவிர வேறு ஒருஒரு காதலி இருக்கிறாராம், இந்த காதலியின் மூலம் எஸ்.சுவாமிக்கு ஒரு குழந்தை இருப்பதாகவும் தகவல் வழியாக இருக்கிறது. கோடிக்கணக்கில் பணம் கொடுத்த விவகாரம், அந்த நடிகைக்கும் கொள்ளைக்கும் உள்ள தொடர்பு குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. தேவைப்பட்டால் அந்த நடிகையையும் பிடித்து விசாரிப்போம் என்று போலீசார் கூறியிருக்கிறார்கள்.