Homeசெய்திகள்தமிழ்நாடுபோராட்டத்திற்கு தயாராகும் டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் : ஆயத்த மாநாடு

போராட்டத்திற்கு தயாராகும் டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் : ஆயத்த மாநாடு

-

- Advertisement -

பணி நிரந்தரம், ஓய்வூதியம், வாரிசுகளுக்கு அரசு பணி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடத்துவது தொடர்பாக டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆயத்த மாநாடு நடைபெற்றது. இதில் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தால் விற்பனை பாதிக்கப்படாத வண்ணம் காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.போராட்டத்திற்கு தயாராகும் டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் : ஆயத்த மாநாடு

தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில், தமிழக அரசுக்கு தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக டாஸ்மாக் ஊழியர்கள், சங்கத்தினர் அவ்வப்போது போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், வரும் பிப்ரவரி 11ஆம் தேதி, எழும்பூரில் இருந்து தலைமை செயலகம் நோக்கி பேரணியாக செல்லும் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். பேரணியின்போது, டாஸ்மாக் ஊழியர்கள் பணி நிரந்தரம், ஓய்வூதியம், பணி பாதுகாப்பு, 100% இஎஸ்ஐ காப்பீடு, கூடுதல் விலைக்கு மதுபானம் விற்காத சூழலை உருவாக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைத்து தலைமைச் செயலக வாயிலில் காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

இந்த பேரணி தொடர்பாக, ஆவடி அடுத்த பட்டாபிராம் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் ஆயத்த மாநாடு நடைபெற்றது . இதில் காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் விற்பனையாளர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு காத்திருப்பு போராட்டத்திற்கான ஆயத்தப் பணிகள் குறித்து ஆலோசித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைவர் பெரியசாமி கூறுகையில், பணி நிரந்தரம் மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளில் நாங்கள் பிடிவாதமாக இருக்கிறோம் . இதற்காக போராட்டம் நடத்த உரிய அனுமதி கொடுத்தால் அந்த இடத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்துவோம் , இல்லையென்றால் அனுமதி மறுத்து கைது செய்தால் சிறைச்சாலையை எங்களது போராட்டம் இடமாக மாற்றி காத்திருப்பு போராட்டத்தை தொடர்வோம் என்றார் மேலும் இந்த போராட்டத்தின் மூலம் டாஸ்மாக் கடையில் விற்பனை எந்த விதத்திலும் பாதிக்காத வண்ணம் ஏற்பாடுகள் செய்து போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தார்.

யுஜிசி புதிய விதிக்கு எதிராக டெல்லியில்  திமுக போராட்டம்..!!

MUST READ