சட்டவிரோதமாக குடியேறிய 104 இந்தியர்களுடன் அமெரிக்காவின் ராணுவ விமானம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் தரையிறங்கியது. விமானம் தரையிறங்கியவுடன், பயணத்தின் போது மக்கள் கை, கால்களில் விலங்கிடப்பட்டதாகவும், அவமானப்படுத்தப்பட்டதாகவும் சமூக ஊடகங்களில் புகைப்படங்கள் வைரலாக பரவியது. இந்த விவகாரத்தில் அரசு தற்போது விளக்கம் அளித்து உண்மை நிலையை கூறியுள்ளது.
சமூக ஊடகங்களில் பல கணக்குகளால் ஒரு போலி படம் பகிரப்படுகிறது. அதில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் கைவிலங்கு, கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளதாக அந்தப்புகைப்படம் உலா வருகிறது. இந்த இடுகைகளில் பகிரப்படும் படங்கள் இந்தியர்களுடன் தொடர்புடையவை அல்ல என்று உண்மைச் சோதனை மூலம் தெரிய வந்துள்ளது.மாறாக குவாத்தமாலாவுக்கு நாடு கடத்தப்பட்டவர்களுடைய புகைப்படங்கள் தான் இவை. இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டவர்களின் புகைப்படங்கள் இவை அல்ல” என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
முன்னதாக சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த புகைப்படத்திற்கு காங்கிரஸ் தலைவர் பவன் கெடாவும் கடு கண்டனம் தெரிவித்து இருந்தார்… அவர் ”இந்தியர்களின் கை- கால்கள் சங்கிலியால் கட்டப்பட்டு அவமானப்படுத்தப்பட்டு, அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட படங்களைப் பார்க்கும்போது, ஒரு இந்தியனாக, நாங்கள் வருத்தப்படுகிறோம். 2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்காவில் இந்திய தூதரக அதிகாரி தேவயானி கோப்ரகடே கைவிலங்கிடப்பட்டு, ஆடைகளை கழற்றி சோதனையிட்ட சம்பவம் நினைவிற்கு வருகிறது. அப்போதைய வெளியுறவுத்துறை செயலர் சுஜாதா சிங், அமெரிக்க தூதர் நான்சி பவலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கடுமையான எதிர்வினையாற்றியது.மீரா குமார், சுஷில் குமார் ஷிண்டே மற்றும் ராகுல் காந்தி போன்ற தலைவர்கள் இந்தியாவிற்கு வருகை தந்த அமெரிக்க பிரதிநிதிகளான ஜார்ஜ் ஹோல்டிங், பீட் ஓல்சன், டேவிட் ஸ்வீகர்ட், ராப் வூடல், மேடலின் போர்டல்லோ போன்றோரை சந்திக்க மறுத்துவிட்டனர்.
அமெரிக்காவின் இந்தச் செயலை டாக்டர் மன்மோகன் சிங் கண்டித்தார். இந்திய அரசாங்கம் அமெரிக்க தூதரகத்திற்கு வழங்கப்பட்ட பல வசதிகளை திரும்பப் பெற்றது. தூதரக பணியாளர்களுக்கான உணவுப் பொருட்கள், மதுபானங்களை சலுகை விலையில் இறக்குமதி செய்தது உட்பட பல சலுகைகள் நிறுத்தப்பட்டன. தேவயானி கோப்ரகடே நடத்தப்பட்ட விதத்திற்கு ஜான் கெர்ரி வருத்தம் தெரிவித்திருந்தார். அமெரிக்க நிர்வாகம் வெளியுறவுச் செயலர் சுஜாதா சிங்கை அழைத்து அமெரிக்கா சார்பில் வருத்தம் தெரிவித்தது.
ஆனால், இப்போது அமெரிக்க விமானத்தில் கொண்டு வரப்பட்ட 104 நாடு கடத்தப்பட்டவர்களில் ஒருவரான ஜஸ்பால் சிங், முழு பயணத்தின்போதும் கைவிலங்கிடப்பட்டதாகவும், கால்கள் கட்டப்பட்டதாகவும் கூறினார். அமிர்தசரஸ் விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னரே அவர் அகற்றப்பட்டது.குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ஹர்தோர்வால் கிராமத்தில் வசிக்கும் ஜஸ்பால் சிங், 36, ஜனவரி 24 அன்று அமெரிக்க எல்லையைத் தாண்டிய பின்னர் அமெரிக்க எல்லைக் காவல் படையினரால் பிடிபட்டதாகக் கூறினார்.
“நாங்கள் வேறு ஏதாவது முகாமுக்கு அழைத்துச் செல்லப்படுகிறோம் என்று நாங்கள் நினைத்தோம்,” என்று அவர் கூறினார். அப்போது ஒரு போலீஸ் அதிகாரி எங்களை இந்தியாவுக்கு அழைத்துச் செல்கிறோம் என்று கூறினார். நாங்கள் கைவிலங்கிடப்பட்டோம், எங்கள் கால்களுக்குக் கட்டுகள் போடப்பட்டன. இவை அமிர்தசரஸ் விமான நிலையத்தில் திறக்கப்பட்டன” எனத் தெரிவித்ததாக காங்கிரஸ் தலைவர் கூறியதாக கங்கிரஸ் தலைவர் பவன் கெடாவு குற்றம்சாட்டி இருந்தார். இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் குறித்து பகிரப்படும் புகைப்படங்கள் இந்தியர்களுடன் தொடர்புடையவை அல்ல. மாறாக குவாத்தமாலாவுக்கு நாடு கடத்தப்பட்டவர்களை பகிர்ந்து வருகின்றனர் என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.