Homeசெய்திகள்சென்னைபெற்றோரின் திருமண நாளை கொண்டாடிவிட்டு - மகன் தற்கொலை

பெற்றோரின் திருமண நாளை கொண்டாடிவிட்டு – மகன் தற்கொலை

-

- Advertisement -

மாங்காடு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் கார் ஓட்டுநர் சதீஷ் குமார் தனது  பெற்றோரின் திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடிவிட்டு திடிரென மயக்கம் வருவதாக கூறி வீட்டின் பெட்ரூமுக்கு சென்று கதவை தாளிட்டு புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகின்றது..பெற்றோரின் திருமண நாளை கொண்டாடிவிட்டு - மகன் தற்கொலைமாங்காடு அருகே மலையம்பாக்கத்தில் சேர்ந்த சதீஷ் குமார்/34  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் (அப்தூல் குத்தூஸ்) கார் ஓட்டுநராக உள்ளார். சதீஷ் குமாருக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு பாக்கியலட்சுமி/30 என்பவருடன்  திருமணமாகி 4 மாத பெண் குழந்தை உள்ளது. பாக்கியலட்சுமி கடந்த 6 மாதங்களாக சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது தாய் வீட்டில் உள்ளார். சதிஷ்குமாரும் மனைவியுடனே மாமியார் வீட்டில் இருந்துள்ளார்.

நேற்று முன் தினம் சதிஷ் குமார் அவரது  தாய் தந்தை திருமண நாளை கொண்டாட மலையம்பாக்கம் வந்தவர். கேக் வெட்டி திருமண நாளை கொண்டாடியதோடு அதனை அவரது மனைவிக்கும் விடியோ காலில் காட்டி மகிழ்ந்துள்ளார். திடிரென மயக்கம் வருவதாக கூறி வீட்டின் பெட்ரூமுக்கு சென்று கதவை தாளிட்டு புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகின்றது..

இது குறித்து சதிஷ்குமாரின் மனைவி மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  சதிஷ்குமார் உயிர் இழப்பு கணவன் மனைவி கருத்து வேறுபாடு காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என மாங்காடு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சதிஷ் குமார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புழல் காவல் நிலையத்தில் கைவரிசை… இரு சக்கர வாகன திருட்டு! – போலீஸ் விசாரணை!

MUST READ