கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சுவாசிகா, பாலசரவணன், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் நடிப்பில் லப்பர் பந்து எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கியிருந்த நிலையில் இப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் ஹரி என்ற இளைஞர் ஒருவர் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் பல சீரியல்களிலும் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஆக பணிபுரிந்து வருகிறார். இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல பிரபலங்களுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் பதிவிட்டு இருக்கிறார். இந்நிலையில் இவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது விருகம்பாக்கத்தில் உள்ள பூங்காவில் சிறுவர்கள் விளையாடும்போது அவர்களிடம் தவறாக நடந்து கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். இந்த சமயத்தில்தான் சிறுவன் ஒருவனிடம் ஐ லவ் யூ டா தம்பி என்று கூறி அவரிடம் அத்து மீறி உள்ளார் ஹரி. உடனடியாக அந்த சிறுவன் தன்னுடைய பெற்றோரிடம் விஷயத்தை சொல்ல அவர்கள் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரியின் அடிப்படையில் ஹரியை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் வாழ்த்தி உள்ளது. மேலும் பெண் குழந்தைகள் மட்டுமில்லாமல் ஆண் குழந்தைகளும் தனக்கு நடக்கும் சம்பவங்களை பெற்றோர்களிடம் சொல்ல வேண்டும். இல்லை என்றால் தவறான வழியில் செல்ல நேரிடும் என போலீஸாரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- Advertisement -