இளம்பெண்ணை ஆட்டோவில் கடத்தி பாலியல் தொல்லை அளித்த ஆட்டோ ஓட்டுநருக்கு உடல்நிலைக்குறைவு – செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை.
சென்னை அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 19-வயது இளம்பெண்ணை ஆட்டோ மூலமாக கடத்தி பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஆட்டோ ஓட்டுநர் முத்தமிழ்செல்வன், அவரது நண்பர் தயாளன் ஆகிய இருவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
குற்றவாளிகளை பிடிக்கும் போது தப்ப முயன்று கீழே விழுந்ததில் சரித்திர பதிவேடு குற்றவாளி தயாளனுக்கு வலது கை மற்றும் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. அதேபோல ஆட்டோ ஓட்டுனர் முத்தமிழ் செல்வனுக்கு வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு மாவு கட்டு போடப்பட்டுள்ளது
இந்நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக இருவரையும் அழைத்து வந்த போது ஆட்டோ ஓட்டுனர் முத்தமிழ்செல்வனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.