Homeசெய்திகள்சினிமாநான் நடித்ததிலேயே அந்த படம் தான்..... 'ரெட்ரோ' படம் குறித்து பூஜா ஹெக்டே!

நான் நடித்ததிலேயே அந்த படம் தான்….. ‘ரெட்ரோ’ படம் குறித்து பூஜா ஹெக்டே!

-

- Advertisement -

நடிகை பூஜா ஹெக்டே ரெட்ரோ படம் குறித்து பேசி உள்ளார்.

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் பூஜா ஹெக்டே தமிழில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானவர். நான் நடித்ததிலேயே அந்த படம் தான்..... 'ரெட்ரோ' படம் குறித்து பூஜா ஹெக்டே!அதைத்தொடர்ந்து இவர் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் மீண்டும் விஜயுடன் இணைந்து ஜனநாயகன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் இவர், ராகவா லாரன்ஸ் தயாரித்து, இயக்கி, நடிக்கும் காஞ்சனா 4 படத்திலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாக இருப்பதாக சமீப காலமாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அது மட்டும் இல்லாமல் கடந்த மாதம் 31ஆம் தேதி வெளியான தேவா திரைப்படத்திலும் ஷாகித் கபூருடன் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இதில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன் ..... 'ரெட்ரோ' குறித்து பேசிய பூஜா ஹெக்டே! இதற்கிடையில் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் ரெட்ரோ திரைப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார் பூஜா ஹெக்டே . நடிகர் சூர்யாவின் 44வது திரைப்படமான இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை சூர்யாவும் கார்த்திக் சுப்பராஜும் இணைந்து தயாரித்திருக்கின்றனர். காதல் கலந்த கேங்ஸ்டர் படமாக உருவாகி இருக்கும் இந்த படம் 2025 மே 1 அன்று திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசிய பூஜா ஹெக்டே ரெட்ரோ படம் குறித்து பேசி உள்ளார். இதில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன் ..... 'ரெட்ரோ' குறித்து பேசிய பூஜா ஹெக்டே!அதன்படி அவர் பேசியதாவது, “இதுவரை நான் நடித்த படங்கள் அனைத்தையும் நினைத்து பெருமைப்படுகிறேன். ஆனால் ரெட்ரோ படத்தை எண்ணி ரொம்ப பெருமைப்படுகிறேன். ரெட்ரோ படத்தில் இடம்பெறும் அனைத்து காட்சிகளையும் நான் விரும்புகிறேன். படப்பிடிப்பு தளத்தில் வடக்குழுவினர்கள் அனைவரும் ஃபுல் எனர்ஜியுடன் இருப்பார்கள். படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தை அருமையாக உருவாக்கியிருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ