நகைச்சுவை நடிகர் சதீஷ் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் நடிகர் சதீஷ். அந்த வகையில் சிவகார்த்திகேயன் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். மேலும் இவர் தற்போது தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். அந்த வகையில் இவர் ஏற்கனவே நாய் சேகர் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து இவர் கான்ஜுரிங் கண்ணப்பன், சட்டம் என் கையில் ஆகிய படங்களில் நடித்திருந்த நிலையில் இந்த இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்தது இவர் கான்ஜுரிங் கண்ணப்பன் 2 திரைப்படத்தில் நடிக்கப் போவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் நடிகர் சதீஷ், வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் புதிய படம் ஒன்றில் நடிக்க போகிறாராம். இந்த படமானது பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே படத்தை போல் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெரும் என்று சொல்லப்படுகிறது. எனவே சதீஷ் நடிக்கும் புதிய படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகும் எனவும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த விவரங்களும் விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -