Homeசெய்திகள்சினிமாகமல் பட இயக்குனர்களை சந்தித்த சிவகார்த்திகேயன்..... என்ன காரணம்?

கமல் பட இயக்குனர்களை சந்தித்த சிவகார்த்திகேயன்….. என்ன காரணம்?

-

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன், கமல் பட இயக்குனர்களை சந்தித்து பேசி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.கமல் பட இயக்குனர்களை சந்தித்த சிவகார்த்திகேயன்..... என்ன காரணம்?நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வலம் வரும் முக்கியமான நடிகர்களில் ஒருவர் ஆவார். இவரது நடிப்பில் கடைசியாக அமரன் திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து இவர் SK 23 படத்தில் நடித்து வருகிறார். அதே சமயம் சுதா கொங்கரா இயக்கி வரும் பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு பாண்டிச்சேரி, சிதம்பரம், காரைக்குடி போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அமரன் படத்திற்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய அடுத்தடுத்த படங்களை மிக கவனமாக தேர்ந்தெடுத்து வருகிறார். அந்த வகையில் திறமை வாய்ந்த இயக்குனர்களை அவரே நேரில் சென்று சந்தித்து பேசி வருகிறாராம்.கமல் பட இயக்குனர்களை சந்தித்த சிவகார்த்திகேயன்..... என்ன காரணம்? அந்த வகையில் தான் கமல்ஹாசனின் 237-வது படத்தை இயக்கும் அன்பு மற்றும் அறிவு ஆகிய இயக்குனர்களை நேரில் சந்தித்து பேசி உள்ளாராம் சிவகார்த்திகேயன். எனவே வருங்காலத்தில் இவர்களது கூட்டணியில் புதிய படம் உருவாகும் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே நடிகர் சிவகார்த்திகேயன் சிபி சக்கரவர்த்தி, விநாயகக் சந்திரசேகரன், வெங்கட் பிரபு ஆகியோரின் இயக்கத்தில் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கிறார். எனவே இந்த படங்களை எல்லாம் முடித்துவிட்டு அன்பறிவ் இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ