Homeசெய்திகள்சினிமாபிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் 'காஞ்சனா 4'.... பொள்ளாச்சியில் படப்பிடிப்பு தீவிரம்!

பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் ‘காஞ்சனா 4’…. பொள்ளாச்சியில் படப்பிடிப்பு தீவிரம்!

-

- Advertisement -

காஞ்சனா 4 திரைப்படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் 'காஞ்சனா 4'.... பொள்ளாச்சியில் படப்பிடிப்பு தீவிரம்!

நடிகர் ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவரது நடிப்பில் கடைசியாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வெளியானது. அதைத் தொடர்ந்து இவர் ஹண்டர், கால பைரவா, பென்ஸ் ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். மேலும் காஞ்சனா 4 திரைப்படத்தையும் தானே இயக்கி நடித்து வருகிறார் ராகவா லாரன்ஸ். இந்த படமானது ராகவா லாரன்ஸின் இயக்கத்திலும் நடிப்பிலும் வெளியான முனி, காஞ்சனா 1,2, 3 ஆகிய படங்களைப்போல் காமெடி கலந்த ஹாரர் கதைக்களத்தில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிகை பூஜா ஹெக்டே இந்த படத்தின் கதாநாயகியாக நடிக்க அவருடன் இணைந்து நோரா ஃபதேஹி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் 'காஞ்சனா 4'.... பொள்ளாச்சியில் படப்பிடிப்பு தீவிரம்!இந்த படம் தொடர்பான அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. அதுமட்டுமில்லாமல் கடந்த ஜனவரி 23ஆம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடைபெற்று வருவதாகவும் இப்படம் ரூ.90 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருவதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.

MUST READ