Homeசெய்திகள்சினிமா'கிங்ஸ்டன்' படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கிய ஜி.வி. பிரகாஷ்!

‘கிங்ஸ்டன்’ படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கிய ஜி.வி. பிரகாஷ்!

-

- Advertisement -

பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ், கிங்ஸ்டன் படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார்.'கிங்ஸ்டன்' படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கிய ஜி.வி. பிரகாஷ்!

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி. பிரகாஷ். அந்த வகையில் இவர், அஜித், விக்ரம் போன்ற பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைக்கிறார். அத்துடன் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். அதன்படி இவர் இடி முழக்கம், மெண்டல் மனதில் ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதற்கிடையில் இவர் கிங்ஸ்டன் எனும் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக திவ்யபாரதி நடித்த இவர்களுடன் இணைந்து சேத்தன், அழகம்பெருமாள் , ராஜேஷ் பாலச்சந்திரன் மற்றும் பலர் நடிகருக்கின்றனர். இந்த படத்தை கமல் பிரகாஷ் எழுதி இயக்கியுள்ளார். இந்த படத்தை ஜி.வி. பிரகாஷ் தயாரித்து இதற்கு இசையமைத்துள்ளார். கோகுல் பினாய் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க ஷான் லோகேஷ் இதன் எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார். ஹாரர் திரில்லர் ஜானரில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்தது.'கிங்ஸ்டன்' படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கிய ஜி.வி. பிரகாஷ்! அடுத்தது இந்த படத்தில் இருந்து பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர், முதல் பாடல் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் இப்படம் 2025 மார்ச் 7ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கி இருப்பதாக ஜி.வி. பிரகாஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார்.

MUST READ