பொதுவாக பலரும் மதியம் சாப்பிட்ட பின் குட்டி தூக்கம் போடுவது வழக்கம். அதாவது குட்டி தூக்கம் என்றாலே 15 முதல் 30 நிமிடங்கள் தூங்குவதுதான் குட்டி தூக்கம். ஆனால் அதுவே ஒன்று முதல் இரண்டு மணி நேரம் நீடித்தால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
அதாவது மதிய உணவிற்குப்பின் தூங்குவது உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சியை உண்டாக்கும். ஆனால் சாப்பிட்ட உடனேயே தூங்குவது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும். இதனால் நெஞ்செரிச்சல், அமில ரிப்லெக்ஸ் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எனவே சாப்பிட்ட பின்னர் சில நிமிடங்கள் நடைபயிற்சி செய்யலாம். அப்படி இல்லை என்றால் இருக்கையில் இருந்தபடியே அமர்ந்து அமர்ந்து எழலாம் அல்லது வேறு ஏதேனும் வேலைகளை செய்யலாம். குறிப்பாக மதியம் சாப்பிட்ட பின்னர் டீ, காபி குடித்தல் கூடாது. அப்படியே மதிய உணவிற்கு பின் படுத்தாலும் இடது புறமாக ஒருக்களித்து படுப்பது நல்லது. இப்படி படுப்பதனால் உணவு செரிமானம் மேம்படும். இது தவிர தினமும் மதியம் சாப்பிட்ட பின் தூங்குவது மாரடைப்பு, ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அது மட்டும் இல்லாமல் மதியம் சாப்பிட்ட பின்னர் குட்டி தூக்கம் தூங்குவது இரவு தூக்கத்தை பாதிக்கும். இது ஏகப்பட்ட பிரச்சனைக்கு முக்கிய காரணமாக அமையும். எனவே மதியம் சாப்பிட்ட பின்னர் தூங்காமல் இருப்பது நல்லது. அதற்கு பதிலாக வேற ஏதாவது வேலையில் கவனம் செலுத்தினால் தூக்கம் தடைபடும். இருப்பினும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.