குட் பேட் அக்லி படம் குறித்து ஜி.வி. பிரகாஷ் அப்டேட் கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி. பிரகாஷ். இவர் இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் பாடகராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். மேலும் இவர் பல பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து பெயரையும் புகழையும் பெற்றுள்ளார். அந்த வகையில் இவர் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார். ஆரம்பத்தில் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கப் போகிறார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு பதிலாக ஜி.வி. பிரகாஷ் களத்தில் இறங்கியுள்ளார். ஜிவி பிரகாஷின் இசைக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கும் நிலையில் அந்த ரசிகர்களில் ஒருவர் எக்ஸ் தள பக்கத்தில் குட் பேட் அக்லி படத்தின் இசை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு ஜி.வி. பிரகாஷ், “வெறியா வரும்.. தரமா இருக்கும்… பொறுத்திருந்து பாருங்கள்” என்று பதிலளித்துள்ளார். இந்த தகவல் அறிந்த மற்ற ரசிகர்களும் உற்சாகத்தில் மிதந்து வருகின்றனர்.
அஜித்தின் குட் பேட் அக்லி படத்தை மார்க் ஆண்டனி இயக்க மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படம் 2025 ஏப்ரல் 10 அன்று வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.