Homeசெய்திகள்சினிமாஎங்களுடைய விவாகரத்து அனைவருக்கும் பொழுதுபோக்காகிவிட்டது.... நாக சைதன்யா வருத்தம்!

எங்களுடைய விவாகரத்து அனைவருக்கும் பொழுதுபோக்காகிவிட்டது…. நாக சைதன்யா வருத்தம்!

-

- Advertisement -

நடிகர் நாக சைதன்யா, தனது விவாகரத்து அனைவருக்கும் பொழுதுபோக்கு ஆகிவிட்டது என வருத்தம் தெரிவித்துள்ளார்.எங்களுடைய விவாகரத்து அனைவருக்கும் பொழுதுபோக்காகிவிட்டது.... நாக சைதன்யா வருத்தம்!நடிகர் நாக சைதன்யா தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர்கள் நடிப்பில் நேற்று (பிப்ரவரி 7) தண்டேல் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை சந்து மொண்டேட்டி இயக்கியுள்ளார். இப்படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருக்கிறார். இந்த படமானது மீனவர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வெற்றிப் பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் நடிகர் நாக சைதன்யா, நடிகை சமந்தாவை கடந்த 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இருவரின் வாழ்விலும் விரிசல் விழ இருவரும் விவாகரத்து பெற்றுக் கொண்ட பிரிந்து சென்றனர். அதன் பின்னர் நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கரம் பிடித்தார். எங்களுடைய விவாகரத்து அனைவருக்கும் பொழுதுபோக்காகிவிட்டது.... நாக சைதன்யா வருத்தம்!இந்த நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசிய நாக சைதன்யா, தனக்கும் சமந்தாவுக்கும் நடந்த விவாகரத்து தகவல் அனைவருக்கும் பொழுதுபோக்கு ஆகிவிட்டது என வருத்தம் தெரிவித்திருக்கிறார். அதன்படி அவர் பேசியதாவது, “எங்களின் இந்த முடிவை ஊடகங்களும் பொதுமக்களும் மதிப்பார்கள் என நம்பினேன். ஆனால் அது நடக்கவில்லை. எங்களின் விவாகரத்து செய்தி அனைவருக்கும் பொழுது போக்காகிவிட்டது. எந்த நிகழ்ச்சிக்கு போனாலும் அதை குத்திக்காட்டி பேசுகிறார்கள் எப்போது தான் இதை நிறுத்துவார்கள் என்று தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ