Homeசெய்திகள்சென்னைமது பழக்கம் இல்லாதவர்க்கு 45% மது அருந்தியதாக வழக்கு

மது பழக்கம் இல்லாதவர்க்கு 45% மது அருந்தியதாக வழக்கு

-

இரவு வாகன சோதனையின் போது குடிப்பழக்கமே இல்லாதவருக்கு 45 சதவீதம் மது அருந்தியதாக ப்ரீத் அனலைசர் கருவில் காண்பித்ததால் அதிர்ச்சி

சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் வீடியோ காட்சிகள்

சென்னை சாலிகிராமம் பகுதியை சேர்ந்தவர் தீபக். இவர் ராயப்பேட்டை பகுதிக்கு வேலை விஷயமாக சென்று விட்டு நேற்று இரவு எல்டாம்ஸ் சாலை வழியாக சாலிகிராமம் நோக்கி தன்னுடைய காரில் சென்று கொண்டிருந்தார்.

மது பழக்கம் இல்லாதவர்க்கு 45% மது அருந்தியதாக வழக்கு

அப்போது அங்கு பணியில் இருந்த போலீசார் தீபக்கின் வாகனத்தை மடக்கி அவர் மது அருந்தியுள்ளாரா? என இயந்திரத்தில் சோதனை செய்துள்ளனர். அப்போது தீபக் மது அருந்தியிருப்பதாகவும், தீபக்கின் உடலில் 45 சதவிகிதம் ஆல்கஹால் இருப்பதாக போலீசார் கூறியுள்ளனர்.

குடிப்பழக்கமே இல்லாத தீபக் இதை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் தனக்கு குடிப்பழக்கம் இல்லை எனவும், உங்களுடைய இயந்திரம் கோளாறாக உள்ளது எனவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மது பழக்கம் இல்லாதவர்க்கு 45% மது அருந்தியதாக வழக்கு

அப்போது குடித்து வாகனம் ஓட்டுவது தொடர்பாக 10,000 ரூபாய் அபராதம் விதித்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவே ஆல்கஹால் பதிவு இருந்த ரசீதில் கையெழுத்திடுங்கள் என போலீசார் வற்புறுத்தியுள்ளனர்.

தொடர்ந்து தீபக் தான் குடிக்கவில்லை என வாக்குவாதம் செய்ததால் போலீசார் வாகனத்தில் இருந்த மற்றொரு இயந்திரத்தை எடுத்து 2வது முறை சோதனை செய்தபோது 2வது முறை தீபக் மது அருந்தவில்லை எனவும் அவருடைய உடலில் 0 அளவு ஆல்கஹால் இருப்பதாக வந்துள்ளது. அதன்பிறகு தீபக்கை போலீசார் விடுவித்துள்ளனர்.

மது பழக்கம் இல்லாதவர்க்கு 45% மது அருந்தியதாக வழக்கு

மது அருந்தும் பழக்கமே இல்லாதவர்க்கு மது அருந்தியதாக ப்ரீத் அனலைசர் கருவியில் மது அருந்தியதாக வந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

MUST READ