Homeசெய்திகள்தமிழ்நாடுஅனைவரையும் ஈர்க்கும் மழை காடுகள்….. கோவையில் மலர் கண்காட்சி ... !

அனைவரையும் ஈர்க்கும் மழை காடுகள்….. கோவையில் மலர் கண்காட்சி … !

-

- Advertisement -

பள்ளி குழந்தைகள் உட்பட பலர் மலர் கண்காட்சி குழந்தைகளை ஈர்க்கும் விலங்குகள், சரவஸ்வதி, பறவைகள் உள்ளிட்ட மலர் சிலைகள். மலர் செடிகளை வீட்டில் வளர்க்க தூண்டுவதாக தெரிவிக்கும் பார்வையாளர்கள். மலர் கண்காட்சியில் கூடுதல் சிறப்பாக அமைந்த பழ, காய்கறி அரங்குகள் … தர்பூசணி பழத்தில் பொறிக்கப்பட்ட தலைவர்களின் முகங்கள். பள்ளி குழந்தைகள், குடும்பத்துடன் வந்த தம்பதிகள், நண்பர்களுடன் வந்த பெண்கள் என அனைவரும் கண்காட்சியை கண்டு மகிழ்ந்தனர்.அனைவரையும் ஈர்க்கும் மழை காடுகள்….. கோவையில் மலர் கண்காட்சி ... !கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில், 7 – வது மலர் கண்காட்சியினை வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர் கே.பன்னீர் செல்வம்,மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி,  கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, இணைவேந்தர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் தட்சிணாமூர்த்தி, துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோர் கண்காட்சியைத் திறந்து வைத்தனர்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இன்று மலர் கண்காட்சி இன்று துவங்கியது. அனைவரையும் ஈர்க்கும் விதமாக மலர் கண்காட்சியில் மழை காடுகளை உருவாக்கி அசத்தியுள்ளனர். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் ஐந்து நாட்கள் நடைபெறும் கண்காட்சியில் தமிழ் நாட்டின் பாரம்பரிய மலர்கள் அதிகமாக இடம் பெறுகிறது. பள்ளி கல்லூரி மாணவர்கள் இயற்கையை பற்றி அறிந்து கொள்ள பயனுள்ளதாக மலர் கண்காட்சி இருக்கும் என தமிழ்நாடு  வேளாண்மை பல்கலைக் கழக துணை வேந்தர் கீதா லக்ஷ்மி தெரிவித்துள்ளார்.

25 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியில் ஒரே நேரத்தில் 25 ஆயிரம் பேர் பார்க்கும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கண்காட்சியை காண பெரியவர்களுக்கு 100 ரூபாய், குழந்தைகள், பள்ளி மாணவர்களுக்கு கட்டண சலுகையாக 50 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கண்காட்சியில் சிறப்பம்சமாக அனைவரையும் கவரும் விதமாக மழைக் காடுகள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மலர் கண்காட்சி பார்த்து ரசிப்பதற்கு மட்டுமின்றி, மலர் குறித்து அறிந்துகொள்ளும் வகையிலும், மலர் கண்காட்சி அமைத்திருக்கின்றனர்.

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கரடி, யானை, பறவை, சரஸ்வதி சாமி சிலைகள், யானை சிலைகள், தம்பதி சிலைகள் என பல மலர் சிலைகள் பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்திருக்கின்றன. இந்த கண்காடையில் பழங்கள் மற்றும் காய்கறிகளும் இடம் பெற்றிருந்தன. இதில் சிறப்பு அம்சமாக தர்பூசணி பழத்தில் முன்னாள் குடியரசு தலைவர்கள் இராதாகிருஷ்ணன், அப்துல் கலாம், அன்னை தெரசா, அன்னல் அம்பேத்கர் உள்ளிட்டோரின் உருவங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. இந்த மலர் கண்காட்சியின் வாயிலாக, மலர் மற்றும் தாவரங்களை எப்படி வளர்ப்பது என தெரிந்து கொள்வதாகவும், வீட்டில் மலர், செடி, தாவரங்களை வளர்க்கும் எண்ணத்தை இந்த மலர் கண்காட்சி தங்கள் மனதில் விதைத்திருப்பதாகவும் பார்வையாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

மலர் கண்காட்சி திறப்பு விழா நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி உரையாற்றும் போது, “வேளாண்மைத் துறையில் கோவை முதல் இடம் பெற்ற நிலையில், தொழில் துறையிலும் முதலிடம், கல்வியில் கோவை முதலிடம், மருத்துவத் துறையிலும் கோவை முதலிடம், இப்படியாக அத்தனை துறைகளிலுமே தமிழ்நாட்டில் கோவை முதல் இடத்தில் இருக்கிறது. இப்படி இருக்கையில் முதலமைச்சர் கோவைக்கு தனி கவனத்தை செலுத்தி, பல்வேறு திட்டங்களையும், அரசு நிதிகளையும் வழங்கி வருகிறார். குறிப்பாக வேளாண் துறைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கை முதன் முறையாக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யக் கூடிய அந்த வாய்ப்பினை, வழங்கி வேளாண் துறை அமைச்சர் தாக்கல் செய்தார்.

இந்தியாவிலேயே வேளாண்மை துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது தமிழகம் தான். 10 ஆண்டு, 20 ஆண்டு என இலவச மின்சாரத்திற்கு பதிவு செய்து காத்து இருந்த, விவசாயிகளுக்கு ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த மூன்று ஆண்டுகளில் இரண்டு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கி இருக்கிறார். ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் ஆண்டிலேயே மூன்று வேளாண் கல்லூரிகள், அமைக்கப்பட்டு  கல்லூரி நடந்து கொண்டு இருக்கிறது. கோவையின் தேவைகளை முதல்வரிடம் எடுத்துச் சொல்லும் பொழுது, நன்கு உணர்ந்து முதல்வர் கோவைக்கு நிதிகளை வழங்கி வருகிறார். இதுவரை இல்லாத அளவுக்கு கோவை மாநகராட்சி பகுதிகளில் மட்டும் 860 கிலோ மீட்டர் அளவுக்கு 415 கோடி மதிப்பிலான தார் சாலைகள் இந்த மூன்று ஆண்டுகளில் அமைக்கப்பட்டு உள்ளது. கூடுதலாக நிதிகள் தேவை என்றவுடன் 200 கோடி ரூபாய் நிதியை சிறப்பு நிதியாக ஒதுக்கினார்.

இன்னும் தேவை இருந்தால் வழங்குவதற்கு தயார் என்றும் கூறியிருக்கிறார். ஏறத்தாழ ஐந்து நாட்கள் நடைபெறுகிற இந்த மலர் கண்காட்சி, ஒரு லட்சம் மலர்களால் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த ஐந்து நாட்களும் கோவை மாவட்ட மக்கள் மற்றும் அருகாமையில் இருக்கக் கூடிய மாவட்ட மக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும்” என தெரிவித்திருக்கின்றார்.

தமிழ்நாடு உழவல் நலன் வேளாண்மை நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்  கண்காட்சியின் போது  பேசுகையில் –  “10, 12 ஆண்டுகளாக மின்சாரம் வேண்டும் என்று விவசாயிகள் பதிவு செய்து காத்து இருந்த போதும் மின்சார இணைப்பு கிடைக்கவில்லை, ஆனால் அமைச்சர் செந்தில் பாலாஜி பொறுப்பேற்றவுடன், உடனடியாக இதற்கு அறிவிப்பு வெளியிட்டு ஓராண்டிற்கு உள்ளாகவே  ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மின் இணைப்புகளை வழங்கி இருக்கிறார்கள். விவசாயிகளுக்கு தேவையான மின் இணைப்புகளை வழங்கி புரட்சி செய்தவர்தான் அமைச்சர் செந்தில் பாலாஜி. விவசாயிகளுக்கு மின் இணைப்பு என்பதே ஒரு பெரிய வரப்பிரசாதம், மின்சாரம் இல்லை என்றால் விவசாயத்தில் உற்பத்தி செய்ய இயலாது. மின்சாரத்திற்காக போராட்டம் நடத்தியவர் தான் நாராயணசாமி நாயுடு, அந்த சமயம் அதிமுக ஆட்சி தான் நடந்து கொண்டு இருந்தது. ஆனால் எப்பொழுது கலைஞர் ஆட்சி ஏற்றாரோ அப்பொழுது இலவச மின்சார திட்டத்தை அறிவித்தார்.

அப்பொழுதெல்லாம் தாலியை அடமானம் வைத்து மின்சார தொகையை கட்டிக் கொண்டு விவசாயம் நடத்திக் கொண்டு இருந்தார்கள். இதில் புரட்சி செய்தது திராவிட முன்னேற்ற கழகம் தான் என்பதை தெரிவித்துக் கொள்வதில் பெருமை கொள்கிறேன். கடந்த வருடம் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கண்காட்சியை கண்டு களித்தார்கள், அதே போன்று இன்று துவங்க இருக்கும் மலர்கண்காட்சியையும் பொதுமக்கள் கண்டுகளிக்க வேண்டும்.

மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான், வேளாண் பல்கலைக் கழகமே கோவையில் துவங்கப்பட்டது. கலைஞர் தான் வேளாண் பல்கலைக் கழகத்தையே துவங்கி வைத்தார், அதனால் தான் இன்றைய தினங்களில் விவசாயிகளுக்கு என்று தனி கல்லூரிகள் உள்ளது. கலைஞர் போட்ட விதையால் தான் இன்று 19 கல்லூரிகள் 28 உறுப்புக் கல்லூரிகள் என வளர்ந்து நிற்கிறது இந்த வேளாண் பல்கலை. அதே போல இங்கு ஆராய்ச்சி செய்து அறிவிக்கப்படும் வெரைட்டி பயிர்கள், மக்களுக்கு பயனுள்ளவையாக இருக்குமா என்று பார்த்து செய்ய வேண்டும். மக்களுக்கு லாபம் தரக் கூடிய வகையிலான பயிர்கள் கண்டுபிடித்து ஆராய்ச்சி செய்து தர வேண்டும்.

கோவையை சுற்றி உள்ள விவசாயிகள் எந்த மாதிரியான பயிர்களை பயிரிட்டால் லாபம் கிடைக்கும், என்பதை ஆராய்ந்து நீங்கள் உருவாக்கித் தர வேண்டும் என வேளாண் பல்கலை ஆராய்ச்சியாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான டென்ஷன் இருக்கும் அது சுகராக மாறிவிடும், இதையெல்லாம் தணிப்பதற்காகத் தான் மலர்கண்காட்சி. தி.மு.க அரசு பொறுப்பேற்ற அதற்குப் பிறகு தான் இது போன்ற மலர் கண்காட்சிகளை நடத்துகிறோம். இது போன்ற மலர் கண்காட்சியை கோவையில் நடத்துவதற்கு நான் பாராட்டு தெரிவிக்கிறேன், அதே போல கடந்த நான்கு ஆண்டுகளில் 1106 கோடி ரூபாய் பல்வேறு நிவாரணங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது, விவசாயிகளும் பயன்பெற்று இருக்கின்றார்கள். என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்,

அதேபோல தொழில் நகரம் என்று நான் படிக்கும் காலத்திலேயே கோவை என்று தான் இருந்தது,அவ்வளவு பெருமை மிகுந்த நகரம் கோவை, அதே போல நடிகர் கார்த்தி அவர்கள் வைத்த கோரிக்கையின் படி, மாணவர்கள் இந்த ஆண்டு பண்ணை சுற்றுலாவிற்கு அழைத்து செல்லப்பட்டு இருக்கிறார்கள். ஏனென்றால் விவசாயத்தைப் பற்றி மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் விலையும் பயிர் முளையிலேயே தெரியும் அதன் அடிப்படையில் பள்ளி, பயிலும் மாணவர்களுக்கு விவசாயத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதேபோல வேளாண் பல்கலையில் செய்யக் கூடிய ஒவ்வொரு ஆராய்ச்சியும் மக்களுக்கு பயனளிக்க கூடியவையாக இருக்க வேண்டும்.  என்று கோரிக்கையாக வைக்கிறேன், அதேபோல நாம் ஆராய்ச்சி செய்து கொண்டு வரும் நெல்லை அனைத்து மாநில மக்களும் சாப்பிட வேண்டும், குறைந்த நாட்களில் விளையக் கூடிய நல்ல பலன் தரக்கூடிய பயிர்களை ஆராய்ச்சி செய்து மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்திருக்கின்றார்.

வாயு தொல்லை முதல் நீரிழிவு நோய் வரை….. அருமருந்தாக பயன்படும் வாழைப்பூ!

MUST READ