Homeசெய்திகள்சினிமாவிஜயின் 'ஜனநாயகன்' படத்தில் இணையும் பிரபல நடிகரின் மகள்!

விஜயின் ‘ஜனநாயகன்’ படத்தில் இணையும் பிரபல நடிகரின் மகள்!

-

- Advertisement -

பிரபல நடிகரின் மகள் ஒருவர் விஜயின் ஜனநாயகன்படத்தில் இணைவதாக தகவல் வெளியாகியுள்ளது.விஜயின் 'ஜனநாயகன்' படத்தில் இணையும் பிரபல நடிகரின் மகள்!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான கோட் படத்திற்கு பிறகு விஜய் நடிப்பில் ஜனநாயகன் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை ஹெச். வினோத் இயக்க கே வி என் ப்ரொடக்சன்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. அனிருத் இதற்கு இசை அமைக்கிறார். சத்யன் சூர்யன் இப்படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி தற்போது பையனூர் பகுதியில் விஜய், பாபி தியோல், பிரகாஷ்ராஜ் ஆகியோரின் காம்பினேஷனில் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜயின் 'ஜனநாயகன்' படத்தில் இணையும் பிரபல நடிகரின் மகள்!மேலும் ஏற்கனவே இந்த படத்தில் விஜயுடன் இணைந்து பூஜா ஹெக்டே, நரேன், பிரியாமணி, கௌதம் மேனன், மமிதா பைஜு ஆகியோர் நடித்து வருகின்றனர். அதே சமயம் வரலட்சுமி சரத்குமார், சிவராஜ் குமார் ஆகியோரின் பெயர்களும் லிஸ்டில் இருக்கிறது.  இந்நிலையில் இந்த படத்தில் புது வரவாக நடிகை ஸ்ருதிஹாசன் இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இனிவரும் நாட்களில் ஸ்ருதிஹாசனின் கதாபாத்திரம் குறித்து அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.விஜயின் 'ஜனநாயகன்' படத்தில் இணையும் பிரபல நடிகரின் மகள்!

நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது ரஜினியின் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். அடுத்தது இவர், தனுஷின் 55வது திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

MUST READ